இலங்கை செய்தி

எரிபொருள் தொடர்பில் அமைச்சர் காஞ்சன வெளியிட்டுள்ள அதிரடி கருத்து

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எரிபொருள் தாங்கிகள் அனைத்துக்கும் எதிர்வரும் ஏப்ரல் 15ம் திகதி முதல் GPS மூலம் கண்காணிக்கும் முறைமை பொருத்தப்படுவதுடன் அதன் பின்னர் தனியார் தாங்கிகளுக்கும் பொருத்தப்படும் என சக்தி மற்றும் மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்தார். அனைத்து எரிபொருள் நிலையங்களும் குறைந்தபட்சம் 50% எரிபொருளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அடுத்த 8 வாரங்களுக்கான எரிபொருள் சரக்கு திட்டம், சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் பண்டிகை காலங்களில் […]

இலங்கை செய்தி

ஊழலுக்கு எதிரான சட்டமூலம் தொடர்பில் வெளியானது புதிய வர்த்தமானி!

  • April 12, 2023
  • 0 Comments

ஊழலுக்கு எதிரான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இதனூடாக, சொத்துகளுடன் தொடர்புடைய இலஞ்சம், ஊழல் மோசடி குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை கண்டறியவும் விசாரணை செய்யவும் வழக்கு தொடரவும் சுயாதீன ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை விஸ்தரிப்பதும் மக்களுக்கான தெளிவூட்டலை மேம்படுத்துவதுமே இதன் நோக்க என கூறப்படுகின்றது.

இலங்கை செய்தி

வைத்தியர்களின் வெளியேற்றத்தினால் நெருக்கடிநிலையில் சுகாதாரத்துறை!

  • April 12, 2023
  • 0 Comments

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலிருந்து ஒன்பது வைத்தியர்கள் வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் ஆறு மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் மற்றும் ஐந்தாண்டுகள் விடுமுறை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நான்கு சிறுவர் வைத்திய நிபுணர்கள் வெளியேறியமையினால் சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டுள்ளதுடன், சிகிச்சை பெற்ற  சிறுவர் நோயாளர்கள் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான் சமரவீர கருத்து தெரிவிக்கையில்,  ​​விசேட வைத்தியர்கள் வெளியேறியுள்ளதாகவும், மற்றுமொரு குழு வைத்தியர்கள் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை செய்தி

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது – பிரமித்த பண்டார தென்னகோன்!

  • April 12, 2023
  • 0 Comments

பொருளாதார மேம்பாட்டுக்கும்  மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்த கடுமையான தீர்மானங்களின் பயனை நாட்டு மக்கள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். பொருளாதார முன்னேற்றத்தின் பயனை மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம் எனவும் பாதுகாப்பு இராஜாங்க […]

இலங்கை செய்தி

பொதுமக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வழிவகுக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் : முக்கியஸ்தர் எச்சரிக்கை!

  • April 12, 2023
  • 0 Comments

பொதுமக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பயன்படுத்தப்படலாம் என பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக மாறியிருக்கின்ற நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் மேற்படி கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் சுமைகளை நலிந்தவர்கள், உழைக்கும் மக்கள்,  தொழிலாளர்கள் மீது சுமத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாட்டில் பாரதூரமான […]

இலங்கை செய்தி

போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக நீர்வழங்கல் தொழிற்சங்கம் அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

எமது சாதாரண கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் தவறியுள்ளதால்  தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்  என நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் இணை அமைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்ணாயக்க மேற்படி அறிவித்துள்ளது. எமது ஒன்றிணைந்த நீர்வழங்கல் தொழிற்சங்கம் 4ஆம் திகதி அலுவலக மற்றும் நுகர்வோர் சேவையில் இருந்து விலகிக்கொண்டோம். நிர்வாக சேவை அதிகாரிகளால் எமது கோரிக்கைகளுக்கு தீர்வொன்றை வழங்கும் என்றே நாங்கள் எதிர்பார்த்ததோம். ஆனாலும் குறைந்த பட்சம் நீர்வழங்கல் […]

இலங்கை செய்தி

ரயிஸ் குக்கரால் சிறுமிக்கு விபரீதம் ;தந்தையை கைது செய்த பொலிஸார்!

  • April 12, 2023
  • 0 Comments

செயற்பட்டுக் கொண்டிருந்த ரைஸ் குக்கர் மூடியை 16 வயது மகளின் முகத்தில் வைத்து தந்தை எரித்த சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிங்வத்த பொலிஸார் தெரிவித்தனர். பிங்வத்த வடுபாசல்வத்த பிரதேசத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி தன் தாயாருடன் வந்து  செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.முகத்தில் எரி காயத்துடன் வந்த பாதிக்கப்பட்ட சிறுமியும் தாயும் நேற்று (05) இரவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சிகிச்சைக்காக […]

இலங்கை செய்தி

நாட்டிற்காக அல்ல, பணத்திற்காகவே அரசாங்கத்துடன் இணைவர் – ஹர்ஷண ராஜகருணா

  • April 12, 2023
  • 0 Comments

எதிர்க்கட்சியிலிருந்து எவரேனும் அரசாங்கத்துடன் இணைவார்களாயின் அவர்களின் நோக்கம் பணமும்,  அமைச்சுப்பதவிகளுமே தவிர நாட்டின் அபிவிருத்தி அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், ஆளுந்தரப்பினர் கூறுவதைப் போன்று எதிர்க்கட்சியிலிருந்து எவரும் அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை. அமைச்சுப்பதவியில் மோகமும்  200 மில்லியனை விரும்புபவர்களுமே அரசாங்கத்துடன் இணைவர் மாறாக எவரேனும் இணைவார்களாயின் அது 200 மில்லியன் […]

இலங்கை செய்தி

இலங்கையில் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுகிறதா?

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாக வெளியான தகவலை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது. அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவு செய்யப்படுவதாகவும், வட்ஸ்எப் மற்றும் பேஸ்புக் அழைப்புகளை கண்காணிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன. எனினும் இந்த செய்திகள் வெறும் வதந்திகள் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு, இதுபோன்ற தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதோ, தொலைபேசி அழைப்புகளை சேமித்து வைப்பதோ அல்லது வட்ஸ்எப் மற்றும் பேஸ்புக் அழைப்புகளை கண்காணிப்பதோ இல்லை […]

இலங்கை செய்தி

இலங்கையில் உச்சம் கொடுக்கும் சூரியன் – நேரம் குறித்து அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் சூரியன் உச்சம் கொடுக்கும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. தென்கரையோரப் பிரதேசங்களில் […]

error: Content is protected !!