இலங்கை செய்தி

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் 8.2 மில்லியன் ரூபாவை சம்பாதித்த இருவர் கொழும்பில் கைது!

  • April 12, 2023
  • 0 Comments

கொழும்பு கெசல்வத்தை   டாம் வீதியில் 8.2 மில்லியன் ரூபாய் பணத்துடன் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் 8.2 மில்லியன் ரூபாவை சம்பாதித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே விசேட அதிரடிப்படையினரால் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரில் முக்கிய சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என்றும்  மற்றைய நபர் வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடையவர் […]

இலங்கை செய்தி

புத்தாண்டின் பின்னர் கட்சித்தாவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

  • April 12, 2023
  • 0 Comments

புதுவருடத்தின் பின்னர் ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார தெரிவித்துள்ளார். கட்சித்தாவல் இடம்பெறவுள்ளதை எங்களால் மறுக்க முடியாது ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பக்கம் செல்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ண எப்போதும் கட்சிதாவும் நோக்கத்துடனேயே உள்ளார் அமைச்சு பொறுப்பை ஏற்பதுகுறித்தும் ஆர்வமாக உள்ளார் என நளின் பண்டார தெரிவித்துள்ளார். ராஜித எப்போதும் […]

இலங்கை செய்தி

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

கடந்த வாரத்துடன் (06) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி  311.63 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி  327.72 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் இன்று சற்று அதிகரித்துள்ளது.  

இலங்கை செய்தி

கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

  • April 12, 2023
  • 0 Comments

கணக்காய்வு சேவை ஆணைக்குழுவுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் ஏப்ரல் 09ஆம் திகதி பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிச்சத்தியம் செய்துகொண்டனர். கணக்காய்வாளர் நாயகம் பதவி அடிப்படையில் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராவார். அதற்கமைய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு டபிள்யூ.பி.சி.விக்ரமரத்ன பதவிச்சத்தியம் செய்துகொண்டார். அது மாத்திரமன்றி ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ, நந்தசீலி கொடகந்த, ஞானானந்தராஜா தேவஞானன், ஏ.எம். தர்மஜித் நயனகாந்த ஆகியோரும் பதவிச்சத்தியம் செய்துகொண்டனர்.

இலங்கை செய்தி

கோட்டாபயவை தெரிவு செய்தது தவறுதான் – பகிரங்கமாக தெரிவித்த பொதுஜன பெரமுன

  • April 12, 2023
  • 0 Comments

2019 இல் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததன் மூலம் தாம் தவறு செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒப்புக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்ததன் மூலம் அப்பிழை திருத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினருமான பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போட்டியிட்டு வெற்றிபெறும் என்றும் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் சுகாதார அமைச்சராகவும் போக்குவரத்து அமைச்சராகவும் பவித்ரா வன்னியாராச்சி செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இலங்கை செய்தி

இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு ஜுனில் நிறைவு!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையின் உள்ளக மற்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் மீளாய்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அதற்கு முன்னர் மறுசீரமைப்புப் பணிகளை முடிக்க முடியும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இணையத்தள கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை […]

இலங்கை செய்தி

இலங்கையில் போலி நாணயதாள்களின் பாவணை அதிகரிப்பு : மக்களுக்கு எச்சரிக்கை!

  • April 12, 2023
  • 0 Comments

புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பாக பொது மக்கள் கவனம் செலுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது. வர்த்தகர்கள் இந்த நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

இலங்கை செய்தி

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

  • April 12, 2023
  • 0 Comments

அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனை நீர்கொழும்பு மக்கள் சபை ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டமானது நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் நடைபெற்றது. இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மின்சார கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தியதுடன்,  புதிய வரி கொள்கையை நீக்குமாறும், மக்களுக்கு சலுகைகளை வழங்குமாறு கோரியும் போராட்டத்தை மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுலோக அட்டைகளை ஏந்தி இருந்ததோடு எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

ஒத்திவைக்கப்பட்டுள்ள சாதாரணப் பரீட்சை – பரீட்சைகள் திணைக்களம்

  • April 12, 2023
  • 0 Comments

கல்விப் பொதுத் தராப்பத்திர சாதாரணப் பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி முதல் எதிர்வரும் மே 14ம் திகதி 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது இந்தநிலையில் தற்போது குறித்த பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சாதாரண தரப்பரீட்சைக்கான புதிய திகதி எதிர்வரும் மே 29ம் திகதி அறிவிக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை செய்தி

யாழில் சிங்களத்தில் மாற்றப்பட்ட வீதியின் பெயரால் பரபரப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் நயினாதீவில் வீதி ஒன்றின் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ளமையானது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயினாதீவில் அமைந்துள்ள வீதி ஒன்றின் பெயர் அதிமேதகு சங்கைக்குரிய பிரஹ்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ பெரஹெர மாவத்தை என சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கல் நடவடிக்கை துரித கதியில் இடம்பெற்றுவரும் இந்த நேரத்தில் இரவோடிரவாக இந்த பெயர்மாற்றமும் இடம்பெற்றுள்ளது. இது தற்போதைய அரசாங்கத்தின் சிங்கள மயமாக்கல் செயற்பாடு என பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

error: Content is protected !!