சிசினாவ் விமான நிலையத்திற்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு
சிசினாவ் சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டதாக மால்டோவன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிதாரி காயமடைந்து கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்த இருவரும் எல்லைக் காவலர் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி என்று ஜனாதிபதி மையா சாண்டு கூறினார்; சந்தேக நபர் 43 வயதான தஜிகிஸ்தான் நாட்டவர் என […]













