மத்திய ஜப்பானில் துப்பாக்கிச் சூடு : மூவர் உயிரிழப்பு!
மத்திய ஜப்பானில் உள்ள நாகானோ ப்ரிஃபெக்சர் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். தாக்குதல் தாரி அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நகானோ, நாகானோ மாகாணத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கி மற்றும் கத்தியுடன் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் கட்டிடமொன்றிற்குள் அடைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.













