இலங்கை

சுற்றுலாப் பயணிகளின் வருகை இரு மடங்காக அதிகரிப்பு

கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை நூற்று எழுபத்தைந்து வீதத்தை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30,207 ஆகவும், இந்த ஆண்டு மே மாதத்தில் வந்தவர்களின் எண்ணிக்கை 83,309 ஆகவும் அதிகரித்துள்ளது. இது 175.8 சதவீத வளர்ச்சியாகும்.  

ஆஸ்திரேலியா

தனது விமான ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்த காண்டாஸ் நிறுவனம்!

  • June 9, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான காண்டாஸ் தனது விமான ஊழியர்களுக்கான  சீருடை விதிகளை நீக்கியுள்ளது. இதன்படி  விமானச் சிப்பந்திகளான பெண்கள் குதி உயர்ந்த பாதணிகளை அணியாமல் விடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆண் சிப்பந்திகளும் மேக் அப் அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவீன எதிர்பார்ப்புகளை சிறப்பாக பிரதிபலிப்பதற்கும்இ பல்லினக் கலாசாரப் பின்னணிகளைக் கொண்ட ஊழியர்களுக்கு சீருடைகள் சௌகரியமாக இருப்பதற்காகவும் இந்த விதிகளில் மாற்றம் செய்துள்ளதாக காண்டாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெண் ஊழியர்கள் கட்டாயமாக மேக் அணிய […]

பொழுதுபோக்கு

திடீரென விலகிய கஜோல்!! பாலிவுட்டில் பரபரப்பு

  • June 9, 2023
  • 0 Comments

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல். ஷாருக்கான், சல்மான் கான் போன்ற டாப் பாலிவுட் நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள கஜோல், நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் காஜலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றது. இந்த நிலையில், நடிகை கஜோல் திடீரென சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், வாழ்க்கையின் கடினமான சூழலில் […]

இலங்கை

தொலைத்தொடர்பு விற்பனை! தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல்

“தேசிய பாதுகாப்பில் சிறிலங்கா டெலிகொம் தனியார் மயமாவதால் ஏற்படும் பாதிப்புகள்” என்ற அறிக்கையின்படி, சிறிலங்கா டெலிகொம் தனியார் மயமாக்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கு பாரிய ஆபத்து ஏற்படலாம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவர் கலாநிதி சரத் வீரசேகர இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று (9) சமர்ப்பித்துள்ளார். தனியார் நிறுவனங்கள் முக்கியமான தகவல் தொடர்பு இணைப்புகளை வைத்திருந்தால், தேசிய பாதுகாப்பு மற்றும் மாநில பாதுகாப்பு நடவடிக்கைகள் […]

இலங்கை

வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

  • June 9, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் வண்ணை வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக இன்று (09) காலை ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கு நீதிமன்றில் இன்றைய தினம் வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீண்ட நேர வாதப்பிரதிவாதங்களின் பின் ஆலய மகோற்சவத்தினை சிவதர்சக் குருக்கள் தலைமையில் தடையின்றி நடத்துமாறும்,  உற்சவத்தினை குழப்புபவர்களை கைதுசெய்யுமாறும் நீதிபதியினால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனடிப்படையில் இன்று மாலை 5 மணிக்கு ஆலயத்தின் தடைப்பட்ட மகோற்சவம் கொடியேற்றத்துடன் […]

இலங்கை

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் அத்துமீறி நுழைய முயன்றவரால் பதற்றம்!

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் ஆராதனையின் போது ஒருவர் தேவாலயத்திற்குள் நுழைய முயன்றுள்ளார். இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் இம்தியாஸ் என்ற நபர் கடலோர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்/ மாத்தளை அகலவத்தை பிரதேசத்தில் நிரந்தர வதிவிடத்தையும் கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தில் தற்காலிக வதிவிடத்தையும் கொண்ட 46 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தேவாலய ஆராதனைகளை கேட்பதற்காக தான் வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு […]

இலங்கை

வைத்தியசாலையில் இன்சுலின் மருந்திற்குத் தட்டுப்பாடு!

  • June 9, 2023
  • 0 Comments

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சைப் பிரிவில் இன்சுலின் மருந்திற்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்சுலின் தட்டுப்பாட்டினால் மருத்துவர்கள் இன்சுலினை வெளியில் வாங்குமாறு தெரிவிப்பதால் நோயாளிகள் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  தேசிய வைத்தியசாலைகளின் நீரிழிவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பலர் இவ்வாறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளைஇ நாட்டில் தற்போது குரங்கம்மை தொற்றுக் குறித்த எவ்வித அச்சுறுத்தலுமில்லை என்பதால் வைரஸ் குறித்து பொது மக்கள் பீதியடைய வேண்டாம் என சுகாதார அமைச்சின் […]

இலங்கை

பொலிஸ் காவலில் ஒருவர் உயிரிழப்பு! பல அதிகாரிகள் கைது

பொலிஸ் காவலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 7 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையின் ஒரு பகுதியாக சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 7 அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவா்களில் உதவி பொலிஸ் பாிசோதகா் ஒருவரும், பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள்கள் 5 பேரும் அடங்கியுள்ளனா். நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றிய ஹிக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் […]

இலங்கை

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்க்கவும்; டயானா

  • June 9, 2023
  • 0 Comments

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, யோசனையை முன்மொழிந்தார். “இன்றைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய உண்மையான உண்மைகள் தெரியாது. இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். பாடசாலை மாணவர்கள் சிலருக்கு சமூக நோய் என்றால் என்னவென தெரியாது. இந்த நோய்களைப் பற்றி சில பிள்ளைகள் அறியாததால் அவர்களுக்குத் தெரியாமல் பல்வேறு சமூக நோய்களால் பாதிக்கப்படலாம். இந்த நோய்களின் அறிகுறிகள் கூட அவர்களுக்குத் தெரியாது என்றார். “பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அதிக […]

error: Content is protected !!