செய்தி தமிழ்நாடு

ஆயுள் தண்டனை கைதி வடிவமைத்த இ சைக்கிள்

  • June 10, 2023
  • 0 Comments

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் யுவ ஆதித்தன் (31). ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த இவர், காதல் விவகாரம் ஒன்றில் 8 ஆண்டுகளுக்கு முன் கொலை சம்பவத்தில் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக கோவை மத்திய சிறையில் உள்ளார். ஏரோநாட்டிக்கல் பொறியியல் படித்த இவர், சிறையில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு ஓரமாக இருந்த பழைய சைக்கிளை பார்த்து அதில் ஏதாவது செய்ய திட்டமிட்டார். […]

ஆசியா

துப்பாக்கி முனையில் சிறுமி கடத்தல்; மதம் மாற்றி, திருமணம் செய்த ஆசிரியர்

  • June 10, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் நாட்டின் சிந்த் மாகாணத்தில் வசித்து வருபவர் திலீப் குமார். இவரது மகள் சுஹானா (14). இந்நிலையில், திலீப் ல் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில், அக்தர் கபோல், பைசான் ஜாட் மற்றும் சாரங் கஸ்கேலி ஆகிய 3 பேர் அவரது வீட்டுக்குள் புகுந்து, தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு, அவரது மகள் சுஹானாவை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று விட்டனர் என தெரிவித்து உள்ளார். எனினும், சுஹானா மதம் மாறி, அவரது விருப்பத்தின் பேரிலேயே […]

இலங்கை

இலங்கை கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

  • June 10, 2023
  • 0 Comments

இலங்கையில் எதிா்வரும் 12ம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் பாடசாலை ஆரம்பமாகவுள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளமை குறித்து கல்வி அமைச்சினால் அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதல் தவணையின் மூன்றாம் கட்டம், திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

விளையாட்டு

ஷர்துல் தாக்கூர் படைத்த புதிய சாதனை

  • June 10, 2023
  • 0 Comments

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 3-ஆம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய ஆணின் இன்னிங்ஸ்ன் போது ஷர்துல் தாக்கூர் நிதானமாக விளையாடி அரைசதத்தை கடந்தார். இந்நிலையில், இந்திய ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர், தி ஓவலில் அதிக 50-க்கும் மேற்பட்ட டெஸ்ட் ஸ்கோரைப் பதிவு செய்ததற்காக டான் பிராட்மேன் மற்றும் ஆலன் பார்டரின் சாதனையை சமன் செய்தார். ஓவல் மைதானத்தில் ஷர்துல் தொடர்ந்து மூன்று 50-க்கும் அதிகமான ஸ்கோரை பதிவு செய்துள்ளார். ஷர்துல் […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் பிரபலம் மஹத் பட டீசர்!! அடி தூள்……

  • June 10, 2023
  • 0 Comments

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் மகத் தற்போது லவ்வர் பாய்யாக நடித்துள்ள ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் ஆர்.அரவிந்த் இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’. o இந்த படத்தை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா தயாரித்துள்ளார். மஹத்துக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த மாடல் அழகி சனா மக்புல் நடித்துள்ளார். மேலும் முக்கிய […]

ஐரோப்பா

பிரான்ஸில் ஓய்வூதியம் பெறும் முதியவருக்கு நேர்ந்த துயரம்

  • June 10, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஓய்வூதியம் பெறும் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Pontoise (Val-d’Oise) நகரில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ஓய்வூதியம் பெறும் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ பரவியதை அடுத்து, தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். 75 தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வீட்டில் சிக்கியிருந்த முதியவர் ஒருவர் உடல் கருகி பலியானார். […]

இந்தியா

தேனிலவு சென்ற தமிழ் தம்பதி பாலி தீவில் உயிரிழப்பு

  • June 10, 2023
  • 0 Comments

சென்னையை சேர்ந்த புதுமண தம்பதிகள், தேனிலவு சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவிற்கு இன்பச் சுற்றுலா சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சென்னையை சேர்ந்த மருத்துவர்கள் ஆன விபூஷ்னியா, லோகேஸ்வரன் ஆகியோருக்கு கடந்த 1ம் திகதி சென்னை பூவிருந்தவல்லியில் திருமணம் நடந்தது. இந்த நிலையில், இந்த புதுமண தம்பதிகள், இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவிற்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளனர். இதனையடுத்து, பாலி தீவில் விரைவு மோட்டார் படகில் சென்றபோது விபத்து […]

வாழ்வியல்

நீண்ட அடர்த்தியான கூந்தலைப் பெற 5 வழிமுறைகள்!

  • June 10, 2023
  • 0 Comments

நீண்ட அடர்த்தியான பளபளப்பான கூந்தல் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு ஒரு கனவாகும். கூந்தலின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி என்பது மரபணுவை சார்ந்ததாக இருந்தாலும் எல்லோருக்கும் தங்களது கூந்தலை நன்றாக பராமரித்து பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் . அவ்வாறு நமது கூந்தல் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் இருக்க நாம் கண்டிஷனர் மற்றும் ஷாம்பூ போன்ற செயற்கையான பொருள்களை தேடிப் போக வேண்டியது இல்லை . நம் வீட்டில் இருக்கக்கூடிய உணவுப் பொருட்களைக் கொண்டே […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் புலம்பெயந்தோரினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி – அதிகரிக்கும் வீட்டு வாடகை

  • June 10, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் வாடகை வீடுகளில் கடந்த ஆண்டை விட சுமார் 44 சதவீதமான வீடுகளின் வாடகை சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. புலம்பெயர்ந்தோர் மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள அதிக தேவையே இதற்கு முக்கிய காரணம். முந்தைய மாதத்தை விட ஒவ்வொரு மாதமும் வீட்டு வாடகை மதிப்பு சுமார் 01 சதவீதம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு காட்டுகிறது. வீட்டு அலகுகளைப் பொறுத்தவரை, சிட்னியில் அதிக மதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன மற்றும் அடிலெய்டில் குறைந்த […]

error: Content is protected !!