ஐரோப்பா முக்கிய செய்திகள்

ரேச்சல் ரீவ்ஸின் (Rachel Reeves) சமீபத்திய பட்ஜெட் – பாரிய நன்மையை பெறும் புலம்பெயர்ந்தோர்!

  • December 7, 2025
  • 0 Comments

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸின் (Rachel Reeves) சமீபத்திய வரவு செலவு திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 350,000 புலம் பெயர் குடும்பங்கள் நன்மையடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வுகளுக்கு அமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது. புதிய பகுப்பாய்வு, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த குடும்பங்கள் கூடுதல் கொடுப்பனவுகளில் மிகப்பெரிய பங்கைப் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகள் நன்மைக்கான உச்சவரம்பு இரத்து செய்யப்பட்டதை  தொடர்ந்து மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட  […]

இலங்கை செய்தி

இதுவரை 18 சடலங்களை மீட்டுள்ள UAE யின் மீட்புக்குழு

  • December 7, 2025
  • 0 Comments

இலங்கையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐக்கிய அரபு எமிரேட் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் நேற்று தீவிர நடவடிக்கைகளைத் தொடர்ந்தன. K9 அலகுகள், மேம்பட்ட இருப்பிட உபகரணங்கள் மற்றும் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக மண்சரிவுகள் சரிவுகள் மற்றும் ஆழமான இடிபாடுகள் வழியாக குழு செயல்பட்டது. அவர்களின் மருத்துவ மற்றும் ஆம்புலன்ஸ் பிரிவு ஒரு வயதான பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட காயமடைந்த 8 நபர்களுக்கு சம்பவ இடத்திலேயே […]

இந்தியா செய்தி

மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கை வந்த அமெரிக்க விமானப்படை.

  • December 7, 2025
  • 0 Comments

மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கும் நோக்கில் அமெரிக்க விமானப்படையின் C-130 விமானங்கள் இலங்கையை வந்தடைந்தன அமெரிக்க விமானப்படையின் சி-130 ரக விமானங்கள் ‘தித்வா’ சூறாவளி நிவாரணப் பணிகளுக்காக இலங்கைக்கு வருகை… ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130 ரக விமானங்கள் இன்று (டிசம்பர் 07, 2025) இலங்கைக்கு வந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த மீட்பு […]

ஐரோப்பா

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ட்ரோன் தாக்குதல்கள்!

  • December 7, 2025
  • 0 Comments

போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க மற்றும் உக்ரைனிய அதிகாரிகள் நடத்திய மூன்றாவது நாள் பேச்சுவார்த்தை இன்று நிறைவடைந்துள்ளது. இருப்பினும் இரவு முழுவதும் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் வடக்கு செர்னிஹிவ் (Chernihiv) பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மத்திய நகரமான கிரெமென்சுக்கில் (Kremenchuk)  உள்கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில்  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் கியேவ் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள் […]

இலங்கை செய்தி

மட்டக்களப்பு சிறை கைதிகளின் மனிதாபிமானம்!

  • December 7, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகள் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களாக வெள்ளிக்கிழமை கையளித்துள்ளனர். இவ்வுலர் உணவுப் பொருட்கள் சிறைக் கைதிகளின் ஊடாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அவை மட்டக்களப்பு கச்சேரியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜிடம் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் நேரில் சென்று கையளிக்கப்பட்டன. இந்த பொருட்களில், அரிசி 325kg, […]

இலங்கை

இலங்கையில் ஒரு முட்டை 70 ரூபாய்? இறைச்சிக்கு தட்டுப்பாடு?

  • December 7, 2025
  • 0 Comments

எதிர்வரும் பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட பேரழிவினால் சுமார் 28 இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளன. இதனால் வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக உயர்வடையும் எனவும் குறிப்பிட்டார். கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான வானிலையால் முழு நாடும் இயற்கை பேரிடருக்கு முகங்கொடுத்துள்ளதுடன் பெரும் வெள்ளம் காரணமாக பண்ணையில் […]

ஐரோப்பா கருத்து & பகுப்பாய்வு செய்தி

கத்தியுடன் பாடசாலைக்கு செல்லும் லண்டன் மாணவர்கள் – பொலிஸாரின் புதிய எச்சரிக்கை!

  • December 7, 2025
  • 0 Comments

கடந்த சனிக்கிழமை(29) லண்டன் Bushey (High Street) Vu Lounge, என்ற உணவகத்தில் ஜெயந்தன் என்ற இளம் குடும்பஸ்தார் உணவருந்திக் கொண்டு இருந்துள்ளார். அங்கே 25 வயதுடைய Dequarn Williams என்ற நபருடன் ஜெயந்தன் வாக்குவாதப்பட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தபோதே, உணவகத்தில் இருந்தவர் எவரோ பொலிசாரை தொடர்பு கொண்டுள்ளார்கள். ஆனால் பொலிசார் வரவில்லை. இது இவ்வாறு இருக்க ஜெயந்தன் உணவை அருந்திவிட்டு, வெளியே அதாவது சீ-ஷா பாருக்கு செல்லும் ஒரு ஓடைக்குச் செல்ல முற்பட்ட வேளை( […]

இலங்கை செய்தி

இலங்கையர்களுக்காக களத்தில் இறங்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

  • December 7, 2025
  • 0 Comments

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக துப்பரவு பணியில் ஈடுப்பட்டு வருவது வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர் வழமை நிலைக்கு திரும்பும் வகையில் மக்கள் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் பெரும் சேதங்களுக்கு உள்ளான பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பெருமளவு மக்கள் ஒன்று திரண்டு பாதிக்கப்பட்ட இடங்களை தூய்மையாக்குவதுடன், தேவையானவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட வெளிநாட்டவர்கள், களத்தில் இறங்கி துப்பரவு […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி மூலம் 100 கோடி! ஹிஸ்புல்லாஹ்வின் உறுதிமொழி.

  • December 7, 2025
  • 0 Comments

அனர்த்தத்தினால் அழிந்துபோயுள்ள மூதூர் பிரதேசத்தை கட்டியெழுப்ப 100 கோடி தேவையென்றாலும் ஜனாதிபதியுடன் பேசி பெற்றுத்தருகிறேன் ஒத்துழைப்பு வழங்குங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார். மூதூர் பிரதேச செயலாளருடனான கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மூதூர் பிரதேசத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அவர்களை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மூதூர் பிரதேச செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். […]

இலங்கை

பூசா சிறைச்சாலையில் வெடித்த கலவரம் – கண்காணிப்பாளர் படுகாயம்!

  • December 7, 2025
  • 0 Comments

பூசா சிறைச்சாலையில் இன்று ஏற்பட்ட கலவரத்தில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். பூசா சிறைச்சாலையின் கைதிகள் குழு ஒன்றை வேறு அறைகளுக்கு மாற்ற முயன்றபோது இந்த கலவரம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைதிகள் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், தற்போது நிலைமை சீராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

error: Content is protected !!