மத்திய கிழக்கு

சவுதி அரேபியா தலைமையில் போர் நிறுத்த உச்சிமாநாடு..

  • July 31, 2023
  • 0 Comments

உக்ரைன்-ரஷ்யா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இரு நாடுகளும் கோதுமை, பார்லி போன்ற உணவு தானியங்களின் ஏற்றுமதி மையமாக உள்ளன. ஆனால் இந்த போர் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டதால் இவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்தது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே போரை நிறுத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் […]

இலங்கை

மட்டகளப்பு- வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம்

  • July 31, 2023
  • 0 Comments

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடகிழக்கு மாகாணத்திற்கான மீளப்பெறமுடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வினை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தி இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி சதுக்கத்தில் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடகிழக்கு மாகாணத்திற்கான மீளப்பெறமுடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வினை வழங்குமாறு வலியுறுத்தும் வகையில் கடந்த ஆண்டு வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுவந்த 100நாள் போராட்டம் நடைபெற்று […]

பொழுதுபோக்கு

ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே த்ரிஷா செய்த மோசமான செயல்…

  • July 31, 2023
  • 0 Comments

பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டியில் பகிர்ந்துகொண்ட விஷயத்தை அடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே த்ரிஷா குடித்தாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர். ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக தலைக்காட்டி பிறகு மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் ஹிட்டடிக்க தமிழின் முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்தை அவர் பெற்றார். தமிழ் சினிமாவில் ஏறத்தாழ அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார். அதிலும் விஜய்க்கும் அவருக்கும் உருவான கெமிஸ்ட்ரி […]

ஆசியா

வெடிமருந்து கிடங்காக மாற்றியுள்ள தைவான் – சீனா குற்றச்சாட்டு

  • July 31, 2023
  • 0 Comments

சீனாவில் நடந்த உள்நாட்டு போரால் கடந்த 1949ம் ஆண்டு தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தங்களது நாட்டுடன் இணைக்க சீனா தீவிர முனைப்பு காட்டுகிறது. அதன்ஒருபகுதியாக தைவான் எல்லையில் அடிக்கடி போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தைவானுடன் வேறு எந்த நாடுகளும் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா எச்சரித்துள்ளது. ஆனால் அமெரிக்கா மட்டும் துவக்கம் முதலே தைவானுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சுமார் […]

மத்திய கிழக்கு

சூடானின் வான்வெளியை தொடர்ந்து மூட நடவடிக்கை!

  • July 31, 2023
  • 0 Comments

சூடான் அதிகாரிகள் தங்கள் வான்வெளியை மூடுவதை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏப்ரல் நடுப்பகுதியில் சூடான் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததை அடுத்து சூடானின் வான்வெளியின்  சாதாரண போக்குவரத்துக்கு மூடப்பட்டது. இதன்படி, ஆகஸ்டு 15ஆம் திகதி வரை வான்வெளி மூடல் காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், மனிதாபிமான உதவி மற்றும் வெளியேற்ற விமானங்கள் தொடர்ந்து இயங்கும் என்று சூடான் அதிகாரிகள் கூறியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் கூறுகின்றன.

இலங்கை

இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

  • July 31, 2023
  • 0 Comments

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (31.07) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். ஹொரோவ்பதான பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை  ஊழியர் ஒருவரை சில குழுவினர் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர். இவ்வாறான நடவடிக்கைகளை தடுக்கக் கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி  தம்புள்ளை, கெக்கிராவ, பொலன்னறுவை, கெபதிகொல்லாவ, அனுராதபுரம், ஹொரோவ்பதான, திருகோணமலை ஆகிய பகுதிகளில் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கமால் திடீரென மேற்கொண்ட இந்த பணிப்புறக்கணிப்பினால், பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இலங்கை

கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் பேய் நடமாட்டம்!

  • July 31, 2023
  • 0 Comments

பாதுக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பேய் நடமாட்டம் இருப்பதாக எழுந்துள்ள நம்பிக்கையினால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த பள்ளியில் படித்த விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவி ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும், அவருடைய ஆத்மா அந்த பாடசாலையில் சுற்றிவருவதாகவும் வதந்தி பரவி வருகிறது. அண்மையில் எடுக்கப்பட்ட படம் ஒன்றில் உயிரிழந்த மாணவியின் நிழல் காணப்படுவதாகவும் இப்பாடசாலையின் வலைப்பந்தாட்ட அணி வீரர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்களின் வருகையும் […]

இலங்கை

புயலில் சிக்கிய கப்பல் : காப்பாற்ற வந்த கெப்டன்!

  • July 31, 2023
  • 0 Comments

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கக் கப்பல் புயலில் சிக்கிய போது, அந்த  ​​கப்பலை காப்பாற்ற ரணில் விக்கிரமசிங்க என்ற கப்டனிடம் ஒப்படைத்ததாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் பொல்கஹவெல தொகுதியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கப்புட்டாவின் கப்பலை புயலில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்துவிட்டதாகவும், தற்போது கப்புட்டாவை தூக்கி கடலில் வீச யாரும் தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில்  […]

இலங்கை

நாமலுக்கு ஏற்பட்டுள்ள திடீர் சந்தேகம்!

  • July 31, 2023
  • 0 Comments

தோல்வியடைந்த கரிம உரத் திட்டத்தை அமுல்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு போராட்டத்தை முன்னெடுத்த மூன்றாம் தரப்பு ஆலோசனை வழங்கியதாக சந்தேகிக்கப்படுகின்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹிரியால தொகுதிக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  முன்னாள் ஜனாதிபதிக்கு யார் அந்த அறிவுறுத்தல்களை வழங்கியது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்றார். யார் என்ன சொன்னாலும் […]

இந்தியா

ஒடிசாவில் மகளை சீரழித்த நபரை அடித்தே கொன்ற தந்தை..!

  • July 31, 2023
  • 0 Comments

ஒடிசா மாநிலம் கந்த்கமல் மாவட்டம் ராய்ஹை பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று மாலை கட்டிட வேலைகள் நடைபெற்று வந்தன. இதில் கான்கிரீட் கலவை எந்திர ஆபரேட்டராக 35 வயது நபர் வேலை செய்து வந்தார். இதனிடையே, அந்த நபர் வேலை நடைபெற்ற பகுதிக்கு அருகே உள்ள வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா பாலியல் வன்கொடுமை செய்த நபரை உருட்டு […]

error: Content is protected !!