இலங்கை

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் : இலங்கைக்கு பாதிப்பா?

  • December 8, 2025
  • 0 Comments

ஜப்பானின் வடக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிலநடுக்கம் இலங்கை நேரப்படி மாலை 7.45 மணிக்கு ஏற்பட்டது, இதனால் சுனாமி அல்லது பிற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். பொதுமக்கள் பீதியடையவோ அல்லது உறுதியற்ற போலியான செய்திகளைப் பரப்பவோ வேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.

உலகம்

பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் ஈரானியர்கள்!

  • December 8, 2025
  • 0 Comments

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஈரானியர்களை ஏற்றிச் செல்லும் இரண்டாவது விமானம் இன்று அமெரிக்காவை விட்டு வெளியேறியுள்ளதாக  ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வொஷிங்டனில் இருந்து நூற்றுக்கணக்கான கைதிகள் ஈரானுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டக் காரணங்கள் மற்றும் குடியேற்ற விதிமுறைகளை மீறியதால் ஈரானியர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய 55 ஈரானியர்கள் நாடுகடத்தப்பட்டதை ஈரானிய வெளியுறவு அமைச்சக அதிகாரி மொஜ்தபா சாஸ்தி கரிமி (Mojtaba Shasti Karimi) உறுதிப்படுத்தியுள்ளார். தெஹ்ரானின் (Tehran) அணுசக்தி தளங்கள் மீது […]

செய்தி விளையாட்டு

இந்திய அணிக்கு அபராதம் விதித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

  • December 8, 2025
  • 0 Comments

பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில், டிசம்பர் 3ம் திகதி ராய்ப்பூரில்(Raipur) நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மெதுவாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேரக் கொடுப்பனவுகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு கே.எல். ராகுலின் அணி இலக்கை விட […]

இலங்கை

தொலைத்தொடர்பு கேபிள்களை சேதமாக்க வேண்டாம் : பொதுமக்களிடம் கோரிக்கை

  • December 8, 2025
  • 0 Comments

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சேவையை மீட்டெடுக்க ஒத்துழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவந்த சீரற்ற காலநிலையால் ஒரு சில பகுதிகளில் நிலத்தடியிலிருந்த தொலைத்தொடர்பு கேபிள்கள் வெளிப்பட்டுள்ளன. அவ்வாறு நிலத்திலிருந்து வெளியே தெரிந்த தொலைத்தொடர்பு கேபிள்களை சேதப்படுத்தல், அறுத்து எடுத்துச் செல்லுதல் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இத்தகைய சம்பவங்களை தவிர்ப்பதற்கு, பொதுமக்களுக்கு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்துமாறு டயலொக் ஆசியாடா நிறுவனம் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அனர்த்தங்களுக்குப் பின்னர் சேதமடைந்த வீதிகளை […]

ஐரோப்பா செய்தி

ரஷ்ய அச்சுறுத்தல் – நீருக்கடியில் பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியில் பிரித்தானியா!

  • December 8, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நீருக்கடியில் பாதுகாப்பை பலப்படுத்த   பல மில்லியன் பவுண்டுகள் செலவில் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கவுள்ளதாக ரோயல் கடற்படை  அறிவித்துள்ளது. அட்லாண்டிக் பாஸ்டன் (Atlantic Bastion) என்று அழைக்கப்படும் இந்த திட்டம் கடலுக்கடியில் கேபிள்கள் மற்றும் குழாய்களைப் பாதுகாத்தல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பாரம்பரிய போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை பாதுகாக்க  உறுதுணையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ரஷ்ய உளவு கப்பல் நடவடிக்கைகளால் பால்டிக் கடல் கேபிள்கள்  சேதமடைந்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]

உலகம் செய்தி

ஜப்பானின் வடக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

  • December 8, 2025
  • 0 Comments

ஜப்பானின் வடக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அமோரி மற்றும் ஹொக்கைடோ கடற்கரையில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்பகுதியில் 3 மீட்டர்(10 அடி) வரை சுனாமி ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்து & பகுப்பாய்வு

2050 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் தொடர்பான இறப்புகள் அதிகரிக்கும்!!

  • December 8, 2025
  • 0 Comments

2050 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் தொடர்பான இறப்புகள் அதிகரிக்கும் என ஆய்வொன்று கணித்துள்ளது. ஆய்வின்படி நோய் அறிதல் 30.5 மில்லியனையும், இறப்புகள் 18.6 மில்லியனையும் எட்டும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இது தற்போதைய புள்ளிவிவரங்களை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் புற்றுநோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறித்த நாடுகளில் நோயை கண்டறிவதற்கான பரிசோதனைகள் குறைந்த அளவில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், உலகளவில் […]

இலங்கை

இந்தியா, சீனா தலைமையில் இலங்கைக்காக சர்வதேச மாநாடு!

  • December 8, 2025
  • 0 Comments

இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் இணைத்தலைமையின் கீழ் இலங்கைக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில பரிந்துரைத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த யோசனையை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ டிட்வா சூறாவளியால் இலங்கைக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. 8 பில்லியன் டொருக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இழப்பை இலங்கையால் தனித்து ஈடுசெய்ய முடியாது. எனவே, இந்தியா, […]

ஐரோப்பா

ரஷ்யாவிற்கு எதிராக கடல் ட்ரோன்களை களமிறக்கும் உக்ரைன்!

  • December 8, 2025
  • 0 Comments

அடுத்த ஆண்டு முதல் ரஷ்யாவிற்கு எதிராக  கடல் ட்ரோன் தாக்குதல்களை நடத்த  திட்டமிட்டுள்ளதாக உக்ரைனின் இராணுவ புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த  கடல்-ட்ரோன் நடவடிக்கைகள் கடற்படை உத்திகளை மாற்றியமைக்க வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இது  கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ஈடுபாடுகளை மட்டுப்படுத்தியுள்ளதாவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் இப்போது “அரிதாகவே இயங்குகின்றன” என்றும், பெரும்பாலும் ஒளிந்து கொள்கின்றன என்றும் உக்ரைனின் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். இது ட்ரோன்களின் செயல்திறனை நிரூபிக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குழு 13 […]

இலங்கை

மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேசிய வேலைத்திட்டம்! 

  • December 8, 2025
  • 0 Comments

மலையக மக்களுக்கான காணி உரிமை உட்பட அவர்கள் எதிர்நோக்கும் நீண்டகால பிரச்சினைகள் சம்பந்தமாக மலையக பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன், அம்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய தேசிய வேலைத்திட்டத்துடன் கூடிய பொறிமுறை உருவாக்கப்படும் எனவும் அவர் கூறினார். நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே கருத்து வெளியிட்ட ஜீவன் தொண்டமான் எம்.பி. , “சீர்திருத்தம், வீடமைப்பு தொடர்பில் பேசப்பட்டாலும், […]

error: Content is protected !!