உலகம்

டிரம்ப் உட்பட 18 பேருக்கு எதிராக பிடிவாரண்ட் உத்தரவு!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முயன்ற குற்றச்சாட்டில் முன்னாள் அதிபர் டிரம்ப் உள்ளிட்டோருக்கு பிடிவாரண்ட் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020இல் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்பை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பைடன் தோற்கடித்தார். இருப்பினும், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், தனக்கு எதிராக மிகப் பெரிய முறைகேடு நடந்ததாக தொடர்ந்து ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டினார்.. இதன்போது வன்முறையாளர்கள் சிலர் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்ததில் ஏற்பட்ட வன்முறையில் சில உயிரிழப்புகளும் […]

இலங்கை

திருகோணமலையில் பௌத்த கொடியை அகற்றி பரபரப்பை ஏற்படுத்திய நபர்

  • August 15, 2023
  • 0 Comments

திருகோணமலை நெல்சன் சினிமா திரையரங்கிற்கு அருகில் அரச மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பௌத்த கொடிகளை அகற்றியதுடன் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான பகுதிக்குள் உள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உப்புவெளி-ஆனந்தபுரி முதலாவது ஒழுங்கையில் வசித்து வரும் (45 வயது) உடையவர் எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தெரிய வருவது திருகோணமலை நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நெல்சன் சினிமா திரையரங்குக்கு […]

இந்தியா

இந்தியாவின் தேசியக் கொடியை அவமதித்த உக்ரைன் பாடகி?

புனேவின் முந்த்வாவில் உள்ள ஒரு கிளப்பில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது இந்தியாவின் தேசியக் கொடியை அவமதித்ததாக உக்ரேனிய பாடகியும், சாந்தி பீப்பிள் இசைக்குழுவின் முன்னணி பாடகருமான உமா சாந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டது, பின்னர் சமூக ஊடக தளங்களில் வைரலாக பரவியது. உமா சாந்தி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கார்த்திக் மொரீன் ஆகிய இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மூத்த காவல் ஆய்வாளர் […]

இலங்கை

பிரித்தானியாவில் சட்டத்தரணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

  • August 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில்  பொய்யான காரணங்களைக்கூறி, சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்களுக்கு உதவும் சட்டத்தரணிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சூயெல்லா பிரேவர்மேன், இதற்கான செயலணி ஒன்றையும் பிரித்தானிய அரசு அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். பல்லாயிரக்கணக்கான ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பணத்துக்காக, பொய்யான காரணங்களைக் கூறி, புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு முன்வந்த சட்டத்தரணிகள் பலரை, பொருளாதார அகதி போன்று நடித்த பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர் அண்மையில் அம்பலப்படுத்தினார். இதனையடுத்தே குறித்த நடவடிக்கை […]

இலங்கை

சக நண்பர்களின் தண்ணீர் போத்தல்களில் விசம் கலந்த மாணவி! பின்னணியில் வெளியான காரணம்

நாரம்மல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் விசம் கலந்த நீரை அருந்திய 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது குறித்த பாடசாலையில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி, அதே தரத்தில் படிக்கும் சக மாணவர்களுடன் இருந்த முன்விரோதம் காரணமாக மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விசத்தை கலந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொழுதுபோக்கு

திரிஷாவுடன் சுற்றுலா சென்றாரா விஜய்? படக்குழு வெளியிட்ட உறுதி

  • August 15, 2023
  • 0 Comments

சமீபத்தில் விஜய் மற்றும் திரிஷா ஜோடியாக ஷாப்பிங் செல்லக்கூடிய காட்சிகள் சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் வைரலானது. இதற்கு ரசிகர்கள் விஜய் மனைவிக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கமன்ட் செய்து வந்தனர். விஜய் திரிஷா விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டு இருக்கிறது. இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் இல்லை என்றும், இந்த புகைப்படங்கள் அனைத்தும் லியோ படத்தில் எடுக்கப்பட்ட காட்சி என்று காப்பி ரயிட்ஸ் அடிப்படையில் டெலீட் செய்து வருகிறது செவென் ஸ்கிரீன்ஸ் […]

செய்தி

கொழும்பு தபால் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற மர்மப் பொதி!

  • August 15, 2023
  • 0 Comments

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு  கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்றை சோதனையிட்டபோது அதில் குஷ் போதைப்பொருள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பொதியில் 600 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த பொதியை எடுத்துச் செல்ல வந்த நபர் ஒருவரை சுங்க அதிகாரிகள் உரிய சோதனையை மேற்கொண்டு கைது செய்துள்ளனர். போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய்  எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை

இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விசேட வைத்தியர்கள் இருக்க வேண்டும்!

  • August 15, 2023
  • 0 Comments

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நோய்க்கும் விசேட வைத்தியர்கள் இருப்பின் தேசிய வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய பிரதான வைத்தியசாலைகளில் நிலவும் நெரிசலை நீக்க முடியும் என கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. அத்துடன், பொது சுகாதார அவசர நிலை மற்றும் அனர்த்த இடர் முகாமைத்துவத்திற்கு தேவையான மனித வளம் இந்த நாட்டில் மிகவும் குறைந்த மட்டத்திலேயே இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்பு குறித்து தேசிய கணக்காய்வு  தணிக்கை […]

மத்திய கிழக்கு

நைஜர் அதிபர் முகமது பாசும் மீது தேசத்துரோக வழக்கு

  • August 15, 2023
  • 0 Comments

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிபர் முகமது பாசுமுக்கு எதிராக திரும்பிய ராணுவம் அவரை சிறைபிடித்தது. பின்னர் அவரை பதவி நீக்கம் செய்து ராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டதாக அவர்கள் அறிவித்தனர். இதற்கு ஐ.நா., ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு போன்றவை எதிர்ப்பு தெரிவித்தன. இந்தநிலையில் முன்னாள் அதிபர் முகமது பாசும் மீது தேசத்துரோக வழக்கு மற்றும் தேசிய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர போவதாக நைஜர் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்காக அவருக்கு எதிரான […]

இலங்கை

வாகன இறக்குமதியில் தளர்வு – வர்த்தமானி வெளியீடு!

  • August 15, 2023
  • 0 Comments

பொதுப் போக்குவரத்து நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பேருந்துகள், லொறிகள், பாரவூர்திகள் மற்றும் பவுசர்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. நிதியமைச்சு குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!