உலகம்

US : மியாமியில் முதல் முறையாக மேயர் பதவிக்கு பெண் ஒருவர் நியமனம்!

  • December 10, 2025
  • 0 Comments

ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி நகரத்தில் இடம்பெற்ற மேயரை தெரிவு செய்வதற்கான தேர்தலில்  முதல் முறையாக  பெண் ஒருவர் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளார். மியாமி மேயர் போட்டியில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எய்லீன் ஹிக்கின்ஸ் (Eileen Higgins) என்ற பெண் வேட்பாளர்,   குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட  எமிலியோ கோன்சலஸை (Emilio Gonzalez) தோற்கடித்து வெற்றியீட்டியுள்ளார். இது  2026 இடைத்தேர்தலுக்கு முன்னதாக ஜனநாயகக் கட்சியினருக்கு ஒரு முக்கியமான ஊக்கத்தை அளிக்கிறது. குடியேற்றம், மனிதாபிமானமற்ற […]

இலங்கை

கிரேக்க பத்திர பரிவர்த்தனை வழக்கு – அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை!

  • December 10, 2025
  • 0 Comments

கிரேக்க பத்திர பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முன்பு இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம், அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வாபஸ் பெற நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டில், கிரீஸ் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் […]

இலங்கை

மக்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயம்!

  • December 10, 2025
  • 0 Comments

சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் கவலை தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் பெரும்பாலும் தூக்கக் கலக்கம், நீடித்த மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் உள்ளிட்ட உணர்ச்சி அதிர்ச்சியின் அறிகுறிகளைக் கொண்டிருப்பதாக   மனநல மருத்துவர் டாக்டர் விந்தியா விஜயபண்டார குறிப்பிட்டார். பேரிடரின் போது ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் நிச்சயமற்ற தன்மையின் விளைவாக பதட்டம், மனச்சோர்வு மற்றும் பிந்தைய மனஉளைச்சல் சீர்குலைவு (PTSD) போன்ற நிலைமைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது […]

இலங்கை

டித்வா சூறாவளி – கடற்கரையில் தேங்கிய குப்பைகள்!

  • December 10, 2025
  • 0 Comments

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து இலங்கையின் கடற்கரையின் 143 கிலோமீட்டர்கள் மாசுபட்டுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் பரவலான வெள்ளம் கடற்கரையில் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என  MEPA தலைவர் சமந்த குணசேகர கூறினார். கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், கல்பிட்டி மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் ஆகிய கடலோரப் பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும். நாடு முழுவதும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் போது […]

கருத்து & பகுப்பாய்வு

வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2025 பதிவு!

  • December 10, 2025
  • 0 Comments

இந்த ஆண்டு (2025) உலகின் இரண்டாவது அல்லது மூன்றாவது வெப்பமான ஆண்டாக இருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் (Copernicus) காலநிலை மாற்ற சேவை (C3S) தெரிவித்துள்ளது. C3Sஇன் தரவுப்படி, சராசரி உலக வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசாங்கங்கள் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான கணிசமான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள  தவறியுள்ள நிலையில், சமீபத்திய ஆய்வு வந்துள்ளது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் கொடிய […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ சர்வதேச உதவி: எதிர்க்கட்சி தலைவரும் களத்தில்!

  • December 10, 2025
  • 0 Comments

  டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச உதவிகளைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இறங்கியுள்ளார். இதற்கமைய கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் அவர் தொடர் சந்திப்புகளில் ஈடுபட்டுவருகின்றார். இதன் மற்றுமொரு அங்கமாக இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர், அந்தலிப் எலியாஸை (10) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சஜித் சந்தித்தார். இலங்கை எதிர்கொண்ட சகல இக்கட்டான தருணங்களிலும் பங்களாதேஷ் இலங்கையுடன் நெருக்கமாக செயற்பட்டமைக்கு ஒட்டுமொத்த இலங்கையர்களின் சார்பாகவும் எதிர்க்கட்சித் […]

உலகம்

பகையாளிகளின் வான் மண்டலத்திற்கு அருகில் போர் பயிற்சியில் ஈடுபட்ட சீனா, ரஷ்யா!

  • December 10, 2025
  • 0 Comments

சீனாவும், ரஷ்யாவும் ஜப்பான் மற்றும் தென் கொரியா அருகே கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் Tu-95  அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் சீனாவின்  H-6 குண்டுவீச்சு விமானங்கள்,  இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இது  தேசிய பாதுகாப்பு குறித்த கடுமையான கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது. ஏழு ரஷ்ய மற்றும் இரண்டு சீன போர் விமானங்கள் அதன் வான்வெளியை மீறவில்லை எனக் […]

உலகம்

பைடனின் SAVE திட்டத்திற்கு எதிராக ட்ரம்ப் எடுத்துள்ள நடவடிக்கை! மாணவர்கள் பாதிப்பு!

  • December 10, 2025
  • 0 Comments

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், 7.6 மில்லியன் கணக்கான மாணவர்கள் பெற்ற கடனை மீள செலுத்தும் வகையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை கொண்டுவர முயற்சித்து வருகிறது. முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் கொண்டுவந்த   SAVE திட்டத்தின் கீழ்  மில்லியன் கணக்கான மாணவர்கள் கடன் பெற்ற நிலையில் அதனை  திருப்பி செலுத்தும் நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் மதிப்புமிக்க இந்த திட்டத்திற்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தற்போது இந்த வழக்கு நிலுவையில் […]

அரசியல் இலங்கை செய்தி

நிவாரணப் பணிகளில் அரசியல் அழுத்தமா? அரசாங்கம் கூறுவது என்ன?

  • December 10, 2025
  • 0 Comments

பேரிடர் நிவாரணப் பணிகளில் அரசாங்க அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது. “ அரசாங்க அதிகாரிகளுக்கு அரசாங்க தரப்பில் இருந்து எவ்வித இடையூறும் விளைவிக்கப்படுவதில்லை. அரசாங்க ஊழியர்களுக்கு சுதந்திரமும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேச தொடர்பு இல்லை என விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால் சிறப்பான முறையில் உறவு பேணப்பட்டுவருகின்றது. சுனாமி அனர்த்தத்தின் […]

அரசியல் இலங்கை செய்தி

Re building Sri lanka திட்டத்திற்கு 1893 மில்லியன் ரூபா நிதி உதவி

  • December 10, 2025
  • 0 Comments

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள Re building Sri lanka திட்டத்திற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் 1893 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். சூறாவளியால் சேதமடைந்த வர்த்தகங்கள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான திட்டத்தை தயாரிப்பது குறித்து இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் தலைமையில் அனைத்து காப்புறுதி நிறுவனங்களின் […]

error: Content is protected !!