ஆஸ்திரேலியா

உலகிலேயே முன்முறையாக… மனித மூளையில் உயிருள்ள புழு

  • August 29, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் ஒரு ஏரிக்கரை அருகில் வசித்து வந்த 64 வயது பெண்மணிக்கு நீண்ட நாட்களாக உடல் ஆரோக்கியத்தில் பல குறைபாடுகள் இருந்து வந்தன. நிமோனியா எனப்படும் மார்புச்சளி, வயிற்று வலி, வயிற்று போக்கு, வறட்டு இருமல், காய்ச்சல், இரவு வியர்வை, மனச்சோர்வு மற்றும் நினைவாற்றல் குறைபாடு ஆகியவற்றுக்கு அவர் நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் மாத்திரை, மருந்துகளால் அவருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. 2021 ஜனவரி மாத கடைசியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு […]

இலங்கை

இலங்கையில் விசா முறையை இலகுப்படுத்த தீர்மானம்!

  • August 29, 2023
  • 0 Comments

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வீசா முறையை இலகுபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையில் தற்போதைய விதிமுறைகளின்படி, இந்த நாட்டில் வருகை விசா, குடியிருப்பு விசா மற்றும் போக்குவரத்து விசா என மூன்று வகையான விசாக்கள்  வழங்கப்படுகின்றன. அவற்றுள், விசிட் விசா மற்றும் வதிவிட விசா ஆகிய இரண்டு வகை விசாக்களின் வழங்கல் நடைமுறைகள் சிக்கலானவை என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிக வெளிநாட்டு ஈர்ப்பு உள்ள நாடுகளில் நடைமுறையில் உள்ள விசா முறைகளை […]

இலங்கை

சீன கப்பலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை – வெளிவிவகார அமைச்சு!

  • August 29, 2023
  • 0 Comments

சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 06’ இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கோரிக்கையை மேலும் ஆராய்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் இலங்கைக்கு வரும் திகதிகள் தொடர்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. எவ்வாறாயினும் வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

ஆசியா

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் குற்றச்சாட்டை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் இடைநீக்கம் செய்துள்ளது. இம்ரான் கானை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, செவ்வாய்க்கிழமை அவர் சிறையில் இருந்து வெளியேறுவாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பிரதமராக இருந்தபோது அரச பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டில் கடந்த 5ஆம் திகதி இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் தண்டனையின் […]

இலங்கை

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!

  • August 29, 2023
  • 0 Comments

எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் பாராளுமன்ற அமர்வுகளுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சமூகமளிக்க வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (28.08) இடம்பெற்ற அமைச்சரவைக் கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி செப்டெம்பர் 5, 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் அமைச்சர்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் தங்கியிருக்குமாறும் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இந்த திகதிகளில் […]

இலங்கை

இலங்கையின் ஏற்றுமதியில் முன்னேற்றம்!

  • August 29, 2023
  • 0 Comments

சமீபத்திய தரவுகளின்படி, நாட்டின் சரக்கு ஏற்றுமதி ஜூலை மாதத்தில் ஒரு பில்லியன் டாலர் அளவைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது, ​​ஜூலை மாதத்தில் இலங்கை வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி 1027.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இது 2.18 வீத அதிகரிப்பு என இலங்கை சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கடந்த ஆண்டு ஜூலையில் பதிவான எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 11.79 சதவீதம் […]

ஐரோப்பா

முதன்முறையாக இந்தியா செல்லவுள்ள பிரதமர் ரிஷி: வெடித்துள்ள சர்ச்சைகள்

  • August 29, 2023
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம், G20 உச்சி மாநாட்டிற்காக இந்தியா செல்கிறார். இந்த தகவல் வெளியானதுமே கூடவே சில சர்ச்சைகளும் உருவாகியுள்ளன. பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில், தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒன்று தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. தற்போது, 12ஆவது சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.இந்தியா சார்பில் இந்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரான பியுஷ் கோயல், பிரித்தானியா சார்பில் பிரித்தானிய வர்த்தகச் செயலரான கெமி பேடனாக் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று […]

இலங்கை

LP எரிவாயு விநியோகம் குறித்து வெளியான முக்கிய தகவல்!

  • August 29, 2023
  • 0 Comments

எதிர்வரும் வருடத்திற்கான LP எரிவாயு விநியோக ஒப்பந்தத்தின் மொத்த விநியோகத்தில் 50%ஐ தற்போதைய விநியோகஸ்தரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு  ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்திற்கு 280,000 மெட்ரிக் தொன் எல்பி எரிவாயு விநியோகிப்பதற்கான கால ஒப்பந்தம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி, 2024-2025 ஆம் ஆண்டுக்கான எல்பி எரிவாயு விநியோகத்திற்கான ஏலம் கோரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது […]

பொழுதுபோக்கு

எங்கும் Vibe செய்யும் உருளைக்கிழங்கு செல்ல குட்டி.. பாடியது யார் தெரியுமா? வீடியோ….

  • August 29, 2023
  • 0 Comments

உருளைக்கிழங்கு செல்லக்குட்டி என்ற பாடல் கடந்த சில காலமாகவே வெகுஜன மக்களால் விரும்பப்பட்ட வருகின்றது, இது குழந்தை பாடல் என்றாலும், மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகின்றது. குறிப்பாக மீம் creatersகளுக்கு இது பெரு லேட்டஸ்ட் ட்ரெண்டிங்காக மாறியுள்ளது என்று தான் கூறவேண்டும். சரி இந்த குழந்தைகள் பாடலை பாடியது யார் தெரியுமா? இவரும் ஒரு பாடகர் தான், அவர் பெயர் மது சௌந்தர், பாடகியும் மற்றும் இன்ஸ்டாகிராம் influencerமான மது தன் குரலில் ஒலித்த இந்த உருளைக்கிழங்கு […]

ஆசியா

ஈராக்கில் தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மூவருக்கு தூக்கு!

  • August 29, 2023
  • 0 Comments

கடந்த 2016 ஆம் ஆண்டு ஈராக்கின் பக்தாத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடைய மூவர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் 300இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மூவர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், அவர்கள் எப்போது கொல்லப்பட்டனர் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

error: Content is protected !!