பிரான்ஸ் தூதரை வெளியேற உத்தரவு – நைஜர் ராணுவ அரசுக்கு பிரான்ஸ் ஜனாதிபதியின் பதிலடி
நைஜர் நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் அழுத்தம் கொடுத்தாலும் பிரான்ஸ் தூதர் அங்குதான் தங்கியிருப்பார் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான். நைஜர் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ராணுவம், கடந்த வெள்ளிக்கிழமையன்று, நைஜர் நாட்டுக்கான பிரான்ஸ் தூதர் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.பிரான்ஸ் தூதரான Sylvain Itté, நைஜரின் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பிற்கான அழைப்பிற்கு பதிலளிக்க மறுத்ததால், அவரை நாட்டை விட்டு வெளியேற்ற முடிவு செய்யப்பட்டதாக ராணுவ அரசின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. […]













