அறிவியல் & தொழில்நுட்பம்

ட்விட்டரில் ஏற்படப்போகும் மற்றுமொரு புதிய மாற்றம்!

கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இந்த தளத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் செய்தார். அண்மையில் ட்விட்டரின் பெயரை மாற்றி அறிவித்தார் எலான் மஸ்க். ட்விட்டரின் பிரபலமான லோகோவான நீலக் குருவி மாற்றப்பட்டு X என ரீபிராண்டிங் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ட்விட்டர் வசதிகள் குறித்த அறிவிப்பு ஒன்றை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் விரைவில் காணொளி மற்றும் ஆடியோ அழைப்பு […]

இலங்கை

இலங்கையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி வாகன இறக்குமதி!

  • September 1, 2023
  • 0 Comments

போலியான ஆவணங்களை பயன்படுத்தி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சிறிய கூப்பர் ரக வாகனமொன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த மோசடி சம்பவம் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது. இவ்வாறாக 400இற்கும் மேற்பட்ட வாகனங்கள், இறக்குமதி செய்யப்பட்டு சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. KE-3845 என்ற இலக்கம் கொண்ட இந்த வாகனம் இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்,  […]

தமிழ்நாடு

டோல்கேட் ஊழல் மற்றும் கட்டண உயர்வை கண்டித்து DYFI அமைப்பினர் போராட்டம்

  • September 1, 2023
  • 0 Comments

டோல்கேட் ஊழல் மற்றும் கட்டண உயர்வை கண்டித்து DYFI அமைப்பினர் கருமத்தம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸாரின் தடுப்பையும் தாண்டி முற்றுகையிட முயன்றதால் குண்டுகட்டாக தூக்கி பொலிஸார் கைது செய்தனர்.இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் கருமத்தம்பட்டியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது இந்த சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு டி ஒய் எப் ஐ சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மறியல் போராட்டம் காரணமாக இப்பகுதியில் 300க்கும் […]

இலங்கை

எரிபொருட்களின் விற்பனை விலையை அறிவித்தது சினோபெக் நிறுவனம்!

  • September 1, 2023
  • 0 Comments

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் நேற்று (31.08) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் தனது வர்த்த செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ள சினோபெக் நிறுவனம் தனது விலையை அறிவித்துள்ளது. இதன்படி 92 ஒக்டேன் பெற்றோலின் லீற்றர் ஒன்றின் விலை 358 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோலின் விலை லீற்றருக்கு 414 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது. ஆட்டோ டீசல் மற்றும் சூப்பர் டீசலின் விலை 338 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 231 ரூபாவாகவும் அறிவித்துள்ளது. […]

இலங்கை

எரிவாயு விலை குறித்து லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • September 1, 2023
  • 0 Comments

எரிவாயு விலைத்திருத்தத்தை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளின் விலை உயர்வை பிரதிபலிக்கும் வகையில், கடந்த மாதம் விலை திருத்தம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் விலைத்திருத்தத்தை மறு பரிசீலனை செய்து புதிய விலையை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் லிட்ரோ சமயல் எரிவாயு நிறுவனமானது, இந்த ஆண்டில் மாத்திரம் தொடர்ச்சியாக நான்கு முறை விலைக் குறைப்புகளை அறிவித்திருந்தது.

இந்தியா

10 நாட்களுக்கு இந்திய ஜனாதிபதி மாளிகைக்கு செல்ல அனுமதி இல்லை!

இந்திய ஜனாதிபதி மாளிகையை பார்வையிட 10 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் 9 மற்றும் 10ம் திகதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 25 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இன்று முதல் எதிர்வரும் 10ஆம் […]

இலங்கை

எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து மற்றுமொரு கட்டணமும் அதிகரிப்பு!

பஸ் கட்டணத்தை அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாளை (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 4 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. இந்த பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் அதிவேக பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்படும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் […]

பொழுதுபோக்கு

நெருப்புடன் இயக்குநர்.. கங்குவா படத்தின் மிரட்டல் போஸ்டர் வெளியீடு

  • September 1, 2023
  • 0 Comments

நடிகர் சூர்யா – இயக்குநர் சிவா காம்பினேஷனில் உருவாகி வருகிறது கங்குவா படம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப் படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோ என வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் […]

இலங்கை

வடக்கின் உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்புகள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

  • September 1, 2023
  • 0 Comments

வடக்கு மாகாணத்தின் கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பினை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னுடைய முயற்சிகளுக்கு துறைசார் அமைச்சரான மருத்துவர் ரமேஸ் பத்திரன பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்குவார் எனவும் தெரிவித்தார். கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி […]

உலகம்

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சினின் தண்டனை ஓராண்டாகக் குறைப்பு!

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் எட்டு ஆண்டு சிறைத்தண்டனையை ஓராண்டாகக் குறைத்துள்ளதாக அரச வர்த்தமானி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. நாட்டின் மிகவும் பிரபலமான அரசியல்வாதி, 2006 இல் இராணுவத்தால் வெளியேற்றப்பட்ட பின்னர் சிறைத் தண்டனையைத் தவிர்ப்பதற்காக வெளிநாட்டில் இருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் தாய்லாந்துக்குத் திரும்பினார். அவர் ஒரு தனியார் ஜெட் விமானத்தில் வந்து, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து சிறைக்கு மாற்றப்பட்டார். முதல் நாள் இரவு, நெஞ்சுவலி மற்றும் […]

error: Content is protected !!