இலங்கை

கடந்த வருடம் முற்றாக அழிக்கப்பட்ட 238.5 மில்லியன் பணத்தாள்கள்

  • September 4, 2023
  • 0 Comments

ரூபாய் 207.3 பில்லியன் பெறுமதியான 238.5 மில்லியன் சிதைக்கப்பட்ட அல்லது சேதமடைந்த பணத்தாள்கள் கடந்த வருடம் முற்றாக அழிக்கப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தரமான மற்றும் சுத்தமான பணத்தாள்கள் நாட்டில் புழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதேபோல் ரூ. 44.3 பில்லியன் பெறுமதியான 108.2 மில்லியன் சேதமடைந்த பணத்தாள்கள் 2021 இலும் அழிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஆசியா

ஆப்கானில் இன்று 4.4 ரிக்டர் அளவில் உணரப்பட்ட நிலநடுக்கம்

  • September 4, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 196 கி.மீ. தொலைவில் இன்று காலை 7.08 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருட்சேதங்கள் தொடர்பான விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை

ஐரோப்பா

மருத்துவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள பிரித்தானிய அரசு

  • September 4, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் வைத்தியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் தற்போது முதலாம் ஆண்டு பயிற்சி வைத்தியர்களுக்கு 10.3 சதவீதமும், இளநிலை வைத்தியர்களுக்கு 8.8 சதவீதமும், மருத்துவ ஆலோசகர்களுக்கு 6 சதவீதமும் சம்பள உயர்வு வழங்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்மூலம் அவர்களுக்கு கணிசமாக சம்பளம் உயர்வதோடு பணவீக்கமும் ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கும் எனக் கருதப்படுகிறது. அதேவேளை பிரிட்டன் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் இளநிலை வைத்தியர்கள் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் நாயை கொலை செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி

  • September 4, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் பொலிஸ் நாயைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்பட்ட 17 வயது இளைஞர் பொலிஸார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஜொனெஸ்பொரோ நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் 3 இளைஞர்கள் சந்தேகத்துக்குரிய முறையில் நடந்துகொண்டதாகப் புகார் கிடைத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். பொலிஸாரை கண்டதும் மூவரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் இருவரை அதிகாரிகள் பிடித்தனர். மூன்றாவது இளைஞரைத் தேட பொலிஸார் நாய் அனுப்பியுள்ளனர். அவர் அருகில் இருக்கும் காட்டுக்குள் இருப்பதை நாய் கண்டுபிடித்தது. அவரை வெளியே வரும்படி காவல்துறை கேட்டுக்கொண்டபோது […]

ஆசியா

இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை – சிங்கப்பூர் மக்களுக்கு நன்றி – தர்மன் பேச்சு

  • September 4, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை என புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் தற்போதைய ஜனாதிபதி ஹலிமா யாக்கோபின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 13- ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. புதிய அதிபரைத் தேர்வுச் செய்வதற்காக நடந்த பொதுத்தேர்தலில், இலங்கை தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். வெற்றிக்கு பிறகு பேசிய தர்மன் சண்முகரத்னம், “இவ்வளவு பெரிய வெற்றியை தான் எதிர்பார்க்கவில்லை. இது அரசியல் தேர்தல் […]

இலங்கை

இலங்கையில் சமையல் எரிவாயுவின் புதிய விலை அறிவிப்பு

  • September 4, 2023
  • 0 Comments

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதன் புதிய விலை மூவாயிரத்து 127ரூபாவாகும். அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை […]

பொழுதுபோக்கு

‘தளபதி விஜய்’யால் ஒரே நாளில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ‘ஹாலிவுட் நடிகர்’

  • September 4, 2023
  • 0 Comments

தளபதியின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ள நிலையில், சமீபத்தில் அவர் விஜய்யின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ‘ முதல்முறையாக விஜய்யின் ஃபேன் பாய் மொமன்ட்’ என பதிவிட்டிருந்தார். அதில் ஹாலிவுட் நடிகர் ஒருவரை பார்த்து விஜய் கையை விரித்துக்கொண்டிருந்தது இடம் பெற்றிருந்தது. அந்த புகைப்படம் இணையத்தில் பரவ, யார் அந்த நடிகர் என மக்கள் தேட ஆரம்பித்தனர். பின்னர் அது டென்சல் வாஷிங்டன் என்றும் விஜய் பார்த்த படம் ‘The Equalizer 3’ என்றும் […]

வாழ்வியல்

உடல் எடையை குறைக்க நேரம் இல்லாதவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • September 4, 2023
  • 0 Comments

குறைவாக சாப்பிடுவது மற்றும் அதிக உடற்பயிற்சி செய்வது பின்பற்றுவது மிகவும் எளிதானது அல்லவா? எவ்வாறாயினும், நம்மில் பலருக்குத் தெரியும், அது அவ்வளவு எளிதானது அல்ல. உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாமல் பலர் போராடலாம். உங்கள் குடும்பம் மற்றும் தொழிலுக்கான உங்கள் அர்ப்பணிப்புகளைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு நாளும் ஜிம்மிற்குச் செல்வது கடினமாக இருக்கலாம். எடை அதிகரிப்பு, வீக்கம் மற்றும் மோசமான தூக்கம் உள்ளிட்ட நீண்ட கால விளைவுகள், நாட்டில் ஏற்படும் மரணத்திற்கான இரண்டு முக்கிய காரணங்களான புற்றுநோய் […]

பொழுதுபோக்கு

கல்யாணம் முடிந்த கையுடன் முடிவுக்கு வரும் சீரியல்… காத்திருக்கும் சன் டிவி

  • September 4, 2023
  • 0 Comments

சன் டிவியில் எதிர்நீச்சல் தொடரால் விஜய் டிவியின் டி.ஆர்.பி பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான ரசிகர்களின் விருப்பத் தொடராக இப்போது இந்த தொடர் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் விஜய் டிவி தொடர்கள் அதிக ரேட்டிங் பெற்று வந்த நிலையில் எதிர்நீச்சலால் மந்தமடைந்துள்ளது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் தங்களது டிஆர்பியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பக்கா பிளான் போட்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது விஜய் டிவியின் சில தொடர்களால் ஓரளவு டிஆர்பி பெற்று வருகிறது. […]

இலங்கை

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

  • September 4, 2023
  • 0 Comments

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை வலியுறுத்துகின்றார். ஆட்சியாளர்களின் தோல்வியை மறைக்க உயர்தர மாணவர்களின் எதிர்காலத்தை பலிகடா ஆக்குவதை நிறுத்து என்ற தலைப்பின் கீழ் விடுத்துள்ள அறிவிப்பிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில், இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மாணவர்களின் உரிமைகள் மற்றும் நடைமுறை நிலைமைகளைப் புறக்கணித்து பரீட்சை திணைக்களம் செயற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி அதிகாரிகள் தமது […]

error: Content is protected !!