ஆஸ்திரேலியா செய்தி

பெண்ணின் அடிவயிற்றில் காணப்பட்ட அறுவை சிகிச்சை கருவி

  • September 5, 2023
  • 0 Comments

நியூசிலாந்தில் ஒரு மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்குப் பிறகு ஒரு பெண்ணின் அடிவயிற்றில் திறந்த அறுவை சிகிச்சைக் காயங்களைப் பிடிக்கப் பயன்படும் கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் 18 மாதங்களாக கடுமையான வலியால் அவதிப்பட்டதாகவும், இரவு உணவுத் தட்டின் அளவுள்ள ரிட்ராக்டர், CT ஸ்கேன் செய்தபோது மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. “எந்தவொரு வழக்கமான அறுவை சிகிச்சை சோதனையின்போதும் [ரிட்ராக்டர்] அடையாளம் காணப்படாததால், வழங்கப்பட்ட கவனிப்பு பொருத்தமான தரத்திற்கு கீழே குறைந்துவிட்டது என்பது சுயமாகத் தெரிகிறது, இதன் விளைவாக அது பெண்ணின் […]

இலங்கை

கண் வில்லைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட முக்கிய தகவல்!

நாட்டில் கண் வில்லைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துப்பொருட்கள் விநியோகப் பிரிவின் களஞ்சியசாலைகளில் மாத்திரமே கண் வில்லைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பிற்குள் கண் வில்லை சத்திரசிகிச்சைகள் வழமை போன்றே மேற்கொள்ளப்படுவதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ தசநாயக்க தெரிவித்துள்ளார். இதனிடையே, நாட்டில் 160 வகையான மருந்துகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த மருந்துகளை […]

விளையாட்டு

Asia Cup – ஆப்கான் அணிக்கு 292 ஓட்ட வெற்றியிலக்கு

  • September 5, 2023
  • 0 Comments

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் ஆட்டத்தில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு 292 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் குசல் ​மெந்திஸ் அதிகபட்சமாக 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். துனித் வெல்லாலகே ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை […]

இலங்கை

கணிதப் பிரிவில் மன்னார் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவன்!

கணிதப் பிரிவில் மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவன் தியாகன் தேவகரன் முதலிடம் பெற்றுள்ளார். 2022 (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று மாலை வெளியாகியிருந்தது. அதனடிப்படையில் க.பொ.த.உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவன் தியாகன் தேவகரன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். முதலிடம் பெற்ற மாணவன் தேவகரன் அவர்கள் அடம்பன் […]

இலங்கை

ஆணைத்தீவு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் மரணம்!

  • September 5, 2023
  • 0 Comments

திருகோணமலை மாவட்டம் ஈச்சிலப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈச்சிலப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.இவ்விபத்து இன்று (05) மாலை இடம்பெற்றுள்ளது இவ்விபத்தில் ஈச்சிலப்பற்று -இலங்கை துறைமுகத்துவாரம் பகுதியில் வசித்து வரும் சந்திரராஜ் கஜேந்திரராஜ் (21) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. வெருகல் கோயிலில் விசேட வழிபாட்டிற்கு தனது தாய் மற்றும் தம்பி ஆகியோரை கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது இவ்விபத்து இடம் பெற்றதாகவும் தெரிய […]

இலங்கை

திருகோணமலை – தென்னமரவடி மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு நிகழ்வு

  • September 5, 2023
  • 0 Comments

குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தென்னமரவடி கிராமத்தில் 12 மீனவப் பெண்களுக்கள் மற்றும் ஆண்களுக்கான மீன்பிடி உபகரனங்கள் AHRC மற்றும் PCCJ நிறுவனத்தினால் இன்று (05.09.2023) வழங்கி வைக்கப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் நிலைபேறான வாழ்வாதார உதவிகளை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களுக்காக AHRC நிறுவனமானது வழங்கி ஊக்குவித்து வருகின்றது. இச் செயற்திட்டத்தின் ஊடாக இன்று (05.09.2023) குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவின் கீழ் உள்ள தென்னமரவடி கிராமத்தில் இயங்கும் மீனவ கூட்டுறவு சங்கத்தின் ஊடாக செயற்பட்டு வரும் மீனவப் […]

பொழுதுபோக்கு

சூர்யாவுக்காக மாதம் ஒருமுறை லண்டன் செல்லும் வெற்றிமாறன்.. இதுதான் காரணம்..!

சூர்யாவின் படத்திற்காக மாதம் ஒரு முறை இயக்குனர் வெற்றிமாறன் லண்டன் சென்று வருவதாக கூறப்படுகிறது. சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் அல்லது சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிப்பார் அல்லது ஒரே நேரத்தில் இரு படங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு […]

பொழுதுபோக்கு

நான் என்ன ஒரு தமிழனா மட்டும் பாக்கல, : முரளீதரன் 800 வெளியானது! (காணொலி இணைப்பு)

  • September 5, 2023
  • 0 Comments

டெஸ்ட் கிரிகெட் வரலாற்றில், 800 விக்கெட்டுக்களை கைப்பற்றி கூடுதல் விக்கெட்டுகள் என்ற உலக சாதனையை கொண்டுள்ள, சுழல் பந்து ஜாம்பவான், முத்தையா முரளீதரனின் வாழ்க்கை வரலாறு 800 என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லரை இந்திய கிரிகெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுகல்கர் இன்று (05.09) வெளியிட்டுள்ளார். பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ‘மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார். முத்தையா முரளிதரன் வேடத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருந்து. கடும் கண்டங்களுக்குப் […]

ஐரோப்பா

ஜேர்மனின் ஒரு திட்டத்தை பிரான்ஸில் பின்பற்ற விருப்பம் தெரிவித்துள்ள மேக்ரான்

  • September 5, 2023
  • 0 Comments

ஜேர்மனி வழங்கும் குறைந்த கட்டண ரயில் திட்டம் போன்றதொரு திட்டத்தை பிரான்சிலும் அமுல்படுத்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் விருப்பம் தெரிவித்துள்ளார். ஜேர்மனி தொடர்ச்சியாக பல்வேறு குறைந்த கட்டண ரயில் திட்டங்களை அறிமுகப்படுத்திவருகிறது.ஜேர்மனி 49 யூரோக்கள் பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது. அது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர், வெறும் 10 யூரோ பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது. அதுவும் அமோக வரவேற்பைப் பெற்றது. ரயிலில் பயணக்கட்டணம் குறைவாக இருப்பதால், பலர் தங்கள் வாகனங்களை விட்டு […]

தமிழ்நாடு

அரசு பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு..! வீடியோ வெளியிட்ட சகோதரன்

  • September 5, 2023
  • 0 Comments

தமிழக மாவட்டம், திருவண்ணாமலையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ராந்தம் கிராமம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் அஞ்சலை (15) மங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், நேற்று இந்த பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொள்வதாக […]

error: Content is protected !!