Asia Cup – ஆப்கான் அணிக்கு 292 ஓட்ட வெற்றியிலக்கு
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் ஆட்டத்தில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு 292 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் அதிகபட்சமாக 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
துனித் வெல்லாலகே ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பெத்தும் நிஸ்ஸங்க 41 ஓட்டங்களையும் மற்றும் சரித் அசலங்க 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் Gulbadin Naib 4 விக்கெட்டுக்களையும், Rashid Khan 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
(Visited 7 times, 1 visits today)