கொழும்பில் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கிய ரயில் ஊழியர்கள்!
கொழும்பில் உள்ள புகையிரத ஊழியர்கள் குழுவொன்று அவசர தொழில்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக குறித்த புகையிரத தளங்களில் இருந்து பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள ரயில்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், நாளைய (12.09) தினம் புகையிரத வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் குறித்து தொழிற்சங்கம் நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைமுறையை திருத்தியமைத்து, ஏறக்குறைய 5 வருடங்களாக தாமதமாகி வரும் […]













