இலங்கை

நீதிமன்றில் ஆஜராகுமாறு MP எஸ்.வினோ நோகராதலிங்கத்திற்கு அழைப்பாணை

  • September 12, 2023
  • 0 Comments

நீதிமன்றில் எதிர் வரும் 14ம் திகதி வியாழக்கிழமை ஆஜராகுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கத்திற்கு முல்லைத்தீவு பொலிஸார் ஊடாக நீதிமன்ற அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையையும் மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் பூசை வழிபாடுகளுக்காக சென்ற பௌத்த குருமாரின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவமானப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சில பிக்குகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். அந்த முறைப்பாட்டுக்கமைவாக முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு […]

இலங்கை

இலங்கையில் அத்தியாவசிய சேவையாக்கப்படும் புகையிரதசேவை!

  • September 12, 2023
  • 0 Comments

புகையிரத சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (12.09) நடைபெற்ற நிலையில், இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “தொழிற்சங்க பயங்கரவாதம்’ காரணமாக சிக்கலில் […]

ஆசியா

சீனாவில் இடைவிடாமல் பெய்யும் கனமழை : 07 பேர் பலி!

  • September 12, 2023
  • 0 Comments

சீனாவின் பலப்பகுதிகளில் பெய்துவரும் இடைவிடாத மழைக்காரணமாக இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹைகுய் எனப் பெயரிடப்பட்டுள்ள சூறாவளியானது 08 நாட்களுக்கு முன்பு சீனாவை தாக்கியது. இந்த புயலைத் தொடர்ந்து தற்போது பெரும்பாலான மாநிலங்களில் மழையுடனான வானிலை நிலவி வருகிறது. இதன்காரணமாக யூலின் நகரின் பெரும்பாலான பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன் இடைவிடாத மழை நிலச்சரிவுக்கும் வழிவகுத்துள்ளது. இதுவரை 115 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.   இதனால் பலப்பகுதிகளில் அவசர எச்சரிக்கை […]

இலங்கை

பிரான்ஸ் அரசுக்கும் – இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

  • September 12, 2023
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவதை கண்டறிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கையின் கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கும் (MEPASL) பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவதை கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.      

ஆசியா

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கூட்டுப்போர் பயிற்சி – சீனா கடும் எதிர்ப்பு

  • September 12, 2023
  • 0 Comments

தென் சீனக்கடல் பகுதியில் சீனா தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. இதனால் அங்குள்ள நாடுகளிடையே ஒருவித பதற்றம் நிலவுகிறது. இந்தநிலையில் 2009ம் ஆண்டு முதல் அமெரிக்கா தலைமையில் இந்தோனேசியா கருடா ஷீல்டு என்ற பெயரில் பயிற்சி நடத்தி வருகிறது. பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டு ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்பட பல நாடுகள் இந்த பயிற்சியில் இணைந்துள்ளன. அதன்படி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தற்போது கூட்டுப்போர் பயிற்சி நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியாவின் எம்.1 ஆப்ராம்ஸ் என்ற 5 போர் டாங்கிகள், […]

இலங்கை

இலங்கையில் வீதி விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு!

  • September 12, 2023
  • 0 Comments

இலங்கையில் பதிவாகும் மரணங்களில் நான்கில் ஒரு பங்கு மரணங்கள் வீதி விபத்துக்களால் ஏற்படுகிறது என வீதி பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. பெரும்பாலான வீதி விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்களினால் ஏற்படுவதாக போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார். “இலங்கையில் வருடத்திற்கு சுமார் 12,000 பேர் உயிரிழப்பதாக தெரிவித்த அவர், இந்த இறப்புகளில் நான்கில் ஒரு பங்கு மரணங்கள் போக்குவரத்து விதி மீறல்களால் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். தோராயமாக […]

இலங்கை

யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் மாயமான 50 கிலோ கஞ்சா

  • September 12, 2023
  • 0 Comments

யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்று பொருளான 50 கிலோ கஞ்சா மாயமாகி உள்ளது என தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு சான்று பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரியினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பகுதியில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் 50 கிலோ கஞ்சா களவாடப்பட்டுள்ளது அல்லது மாயமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சான்று பொருளே […]

பொழுதுபோக்கு

“மறக்குமா நெஞ்சம்” நடந்தது என்ன? ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்துள்ள வேண்டுகோள்

  • September 12, 2023
  • 0 Comments

இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்றவர்கள், இ-மெயில் முகவரிக்கு டிக்கெட் நகலை அனுப்புமாறு ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மறக்குமா நெஞ்சம் என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 25,000 பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமன்றி, அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான கூட்டம் […]

வட அமெரிக்கா

மகனுக்கு விசித்திர பெயர் வைத்த எலான் மஸ்க்!

  • September 12, 2023
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் தமக்கும் முன்னாள் காதலி கிரைம்ஸுக்கும் மூன்றாவது பிள்ளை பிறந்திருப்பதாக உறுதிசெய்திருக்கிறார். உடன்பிறந்தவர்களைப் போன்று அந்தப் பிள்ளைக்கும் விசித்திரமான பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அவர்களது மகனின் பெயர் ‘Tau Techno Mechanicus’ என தெரியவந்துள்ளது. இது குறித்து 52 வயது மஸ்க் X தளத்தில் பதிவிட்டிருந்தார். X சமூக ஊடகத்தின் நிறுவனர் இலோன் மஸ்க்கிற்கும் முன்னாள் காதலி கிரைம்ஸுக்கும் மொத்தம் 3 பிள்ளைகளாகும். அவர்களது மூன்று வயது மகன் ‘X’ என்றும் […]

ஐரோப்பா

ரஷ்யாவிற்கு தடை – பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

  • September 12, 2023
  • 0 Comments

2024ஆம் ஆண்டில் பிரான்ஸில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கு பெற ரஷ்யாவிற்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ஆக்ரமிப்பில் ரஷ்யா போர்க்குற்றம் நடாத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளிலும் மற்றைய ஏனைய விளயாட்டுகளிலும் ரஷ்யாவின் கொடி பறக்கக் கூடாது எனவும் எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!