ஆபாச படங்கள், வீடியோவை வெளியிடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் முயற்சியில், அனுமதியின்றி அந்தரங்கமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிரும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கும் வகையில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த இலங்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், இது தொடர்பான சட்டங்கள் அடங்கிய உத்தேச சட்டமூலம் தொடர்பான குறிப்பாணையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். காதல் உறவுகளின் போது எடுக்கப்பட்ட தனிப்பட்ட, நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த உறவு முறிந்த பின்னர் சிக்கலை ஏற்படுத்துவதற்காக வேறு […]













