X தளத்தை அணுக கட்டணம் செலுத்த வேண்டுமா?
தற்போது X என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள டுவிட்டரை பயன்படுத்துவோர் தளத்தை அணுகுவதற்கு பணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இந்த தகவல் இன்னும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இது குறித்து டெஸ்லா நிறுவனத்திடம் பிபிசி அறிக்கை கோரியுள்ளது. இருப்பினும் அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் இந்த தகவலை உறுதிபடுத்த முடியவில்லை.













