ஆசியா

தாய்லாந்தில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பீர் பாட்டில்களால் கட்டியெழுப்பட்ட புத்தர் கோவில்!

  • September 22, 2023
  • 0 Comments

தாய்லாந்தில் பல லட்சம் பீர் பாட்டில்களை கொண்டு புத்தர் கோவில் ஒன்று கட்டப்பட்டு இருப்பது அனைவரும் ஆச்சரியத்தை வழங்கியுள்ளது. தாய்லாந்தின் சிகாகெட் மாகாணத்தில் குன் ஹான் மாவட்டத்தில் இந்த புத்தர் கோவில் அமைந்துள்ளது. வாட் பா மஹா செடி கேவ் என்று அழைக்கப்படும் இக் கோவில் கிரேட் கிளாஸ் பகோடாவின் வனப்பகுதி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் தனிச்சிறப்பு என்னவென்றால் இந்த கோவில் வளாகம் முழுவதும் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பீர் பாட்டில்கள் கொண்டு […]

இலங்கை

இலங்கையில் போலியான முட்டைகள் விற்பனை செய்யப்படுகிறதா? : நுகர்வோர் அதிகார சபை வெளியிட்ட தகவல்!

  • September 22, 2023
  • 0 Comments

இலங்கையில் அண்மைக்காலமாக முட்டைகளுக்கு தட்டுப்பாடு, விலை உயர்வு என பல்வேறு பிரச்சினைகள் நிலவியது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் குறித்து தவறான கருத்து ஒன்று பரவி வருகிறது. அதாவது செயற்கை முட்டைகள் (இறப்பர் முட்டைகள்) விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,  போலி பிளாஸ்டிக் அரிசி இருப்பதாக பரப்பப்படும் பிரசாரம் போன்று இதுவும் பொய்யான செய்தி என்பதால் முட்டையை […]

பொழுதுபோக்கு

தனுஷ் உடன் ஓவர் நெருக்கம்… பாட்ஷா பாணியில் வீட்டிற்கே சென்று மிரட்டிய ரஜினிகாந்த்

  • September 22, 2023
  • 0 Comments

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்த அமலா பால், சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் நடிகை அமலாபால் சினிமாவில் நடித்து வந்தார். இது ஏ.எல்.விஜய் குடும்பத்துக்கு பிடிக்காததால் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. இதனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே நடிகை அமலா பால் விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களின் பிரிவுக்கு தனுஷ் – அமலா பால் இடையேயான நெருக்கமும் ஒரு காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது. வேலையில்லா பட்டதாரி படத்தில் […]

வட அமெரிக்கா

இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ..

  • September 22, 2023
  • 0 Comments

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா-கனடா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அவரது கொலையில் விசாரணை மற்றும் நீதி வழங்கப்படுவதற்கு கனடாவுடன் இணைந்து செயல்படுமாறு இந்தியாவுக்கு அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்து உள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்த விஷயத்தை இந்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் முழு வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்தவும், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்தவும் எங்களுடன் இணைந்து […]

இலங்கை

மாணவர்களின் புத்தகப் பைகளில் இருந்து மீட்கப்பட்ட இன்ஹேலர்கள் : வர்த்தகர் கைது

  • September 22, 2023
  • 0 Comments

சந்தேகத்துக்கு இடமான திரவம் அடங்கிய இன்ஹேலர்கள் சில, பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளில் இருந்து மீட்கப்பட்டதாக கொக்கரெல்ல பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை மாணவர்கள் சிலரின் புத்தகப் பைகளில் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து அவற்றை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனைச் செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் வர்த்தகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கொக்கரெல்ல பொலிஸார் தெரிவித்தனர். அவர், கொக்கரெல்ல பிரதேசத்தில் அலைபேசி மற்றும் அலைபேசிக்கான உபகரணங்களை விற்பனைச் செய்யும் வி​ற்பனை நிலையத்தை நடத்திச் செல்பவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த […]

மத்திய கிழக்கு

லெபனான்- அமெரிக்க தூதரக அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்

  • September 22, 2023
  • 0 Comments

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமெரிக்க தூதரக அலுவலகம் செயல்படுகிறது. இங்கு இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனையடுத்து பாதுகாப்பு கருதி அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தூதரக செய்தித்தொடர்பாளர் ஜேக் நெல்சன் தெரிவித்தார். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையே பொலிஸார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். […]

ஐரோப்பா

2500 போர் விமானங்களை கொள்வனவு செய்யும் அமெரிக்கா!

  • September 22, 2023
  • 0 Comments

அமெரிக்க இராணுவம் கிட்டத்தட்ட 2,500 F-35 போர் விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 1.7 டிரில்லியன் டொலர்களை இதற்காக செலவிட திட்டமிட்டுள்ளது. ஆனால் தீவிர பராமரிப்பு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. அரசாங்க பொறுப்புக்கூறல் அலுவலகம் (GAO) வழங்கிய அறிக்கையின்படி,  அமெரிக்க வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஆயுத அமைப்புகளில் ஒன்றான F-35 திட்டம், ஜெட் விமானங்களைச் செயல்பட வைப்பதில் சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொன்றும் சுமார் $100 மில்லியன் செலவாகும்  எனவும்,  10,000 […]

இலங்கை

கன்னியா வெந்நீர் ஊற்று காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் குண்டு!

  • September 22, 2023
  • 0 Comments

திருகோணமலை- கன்னியா வெந்நீர் ஊற்று காட்டுப்பகுதியில் இன்று (22) காலை மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது இன்று (22) காலை கன்னியா சுடுதண்ணீர் கிணற்றுக்கு செல்லும் வீதிக்கு அண்மையில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் சம்பூர் நவரெட்ணபுரம் காட்டுப் பகுதியில் ரி56 ரக துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாகவும் […]

பொழுதுபோக்கு

‘800’ திரைப்படம் சிங்கள மொழியில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றது….

  • September 22, 2023
  • 0 Comments

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சட்டத்தில் முதன்முறையாக திருத்தம் கொண்டு வரப்பட்ட நிலையில், சர்வதேச அளவில் தயாரிக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுத் கதையை கூறும் ‘800’ திரைப்படத்தை சிங்கள மொழியில் மொழிமாற்றம் செய்வதற்கு அமைச்சர் பந்துல குணவர்தன உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளார். இந்த தீர்மானம், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு செலுத்தும் அர்த்தமுள்ள மரியாதையாக அமைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தை சிங்கள மொழியில் டப்பிங் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய திரைப்படக் […]

இலங்கை

கிழக்கு மாகாண ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் – அருட்தந்தை மா.சத்திவேல்

  • September 22, 2023
  • 0 Comments

தியாக தீபம் திலீபன் மக்கள் அஞ்சலி ஊர்தியும் அதனோடு பயணித்தவர்கள் தாக்கப்பட்டமைக்கு தார்மீக பொறுப்பை ஏற்று கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலக வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தியாக தீபம் திலீபன் மக்கள் அஞ்சலி ஊர்தியும் அதனோடு பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், […]

error: Content is protected !!