ஆசியா

சிங்கப்பூரில் நண்டு உணவுக்கு 680 டொலர் பில்லால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள்!

  • September 23, 2023
  • 0 Comments

ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஜுன்கோ ஷின்பா தனது நண்பர்கள் மூன்று பேருடன் சிங்கப்பூரில் உள்ள ரெஸ்டாரன்டில் சாப்பிட சென்றிருந்தார். சப்ளை செய்யும் நபர், இங்கு நண்டு உணவு பிரமாதமாக இருக்கும் என கூறி அதன்விலை 20 டொலர் எனத் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து ஜுன்கோ தனது நண்பர்களுடன் அந்த நண்டு உணவை சாப்பிட்டுள்ளார். அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னர், சப்ளை செய்த நபர், பில்லை நீட்டியுள்ளார். அப்போது நண்டு உணவுக்கு 680 டொலர்(இலங்கை மதிப்பில் 2லட்சத்து 20ஆயிரம் ரூபாய்) […]

உலகம்

நேபாளத்தில் போராட்டத்தில் இறங்கிய ஆசிரியர்கள் : மாணவர்கள் பாதிப்பு!

  • September 23, 2023
  • 0 Comments

நேபாளத்தில் பாடசாலை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்ந்து மூன்றாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேபாள பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கல்வி சீர்திருத்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏறக்குறைய 100,000 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் இணைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொழுதுபோக்கு

அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி…

  • September 23, 2023
  • 0 Comments

விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து இந்த வாரமும் இரண்டாவது இடத்தையே பெற்றுள்ளது. இந்தத் தொடரில் பரபரப்பான காட்சிகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார் இயக்குநர். இருந்தபோதிலும் முதலிடத்தை பிடிக்க தொடர் தடுமாறி வருகிறது. விஜய் டிவியின் முதலிடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தத் தொடரின் முத்து மற்றும் மீனா கேரக்டர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பாக்கியலட்சுமி தொடரிலும் பாக்கியா, கோபி மற்றும் ராதிகா என லீட் கேரக்டர்கள் மற்றும் […]

இலங்கை

இலங்கையில் வைத்திய துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை : 1000 பேர் இராஜினாமா!

  • September 23, 2023
  • 0 Comments

இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் மருத்துவர்கள் இராஜினாமா செய்துள்ளதாக கோபா குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவுகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராய கோபா குழு கூடியபோதே டொக்டர் ஜி.விஜேசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், 05 வருட விடுப்பு மற்றும் வெளிநாடு சென்றமை, சேவையில் இருந்து விலகல், முன்னறிவிப்பின்றி ராஜினாமா செய்தல் மற்றும் குறிப்பிட்ட சேவைக் காலம் முடிந்து ஓய்வு […]

வட அமெரிக்கா

உக்ரைனுக்கு ATACMS நீண்ட தூர ஏவுகணை வழங்க அமெரிக்கா திட்டம்

  • September 23, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை அமெரிக்கா வழங்க திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் சமீபத்திய நிகழ்வாக, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவின் கருங்கடல் கடற்படையின் தலைமையகத்தை உக்ரைனிய ஏவுகணை தாக்கியுள்ளது.இது தொடர்பாக BBC செய்தி நிறுவனத்திடம் உக்ரைனிய அதிகாரிகள் வழங்கிய தகவலில், ஸ்ட்ரோம் ஷடோ ஏவுகணைகளை(Storm Shadow missiles) கொண்டு செவாஸ்டோபோல் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளனர். இந்த ஸ்ட்ரோம் ஷடோ […]

இலங்கை

திலீபன் நினைவேந்தலுக்கு தடைகோரி பொலிஸார் மனு தாக்கல் – தள்ளுபடி செய்த முல்லைத்தீவு நீதிமன்றம்

  • September 23, 2023
  • 0 Comments

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைகோரி மாங்குளம், மல்லாவி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றால் தள்ளுபடி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு கடந்த 15 .09. 2023 அன்று பொத்துவில் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனி ஆனது கிழக்கு மாகாணத்தை தாண்டி வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து வருகின்றது இதன்போது அதிகளவான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலமையில் […]

protest in Ramanathapuram அரசியல் தமிழ்நாடு

ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம்: பாலம் அமைப்பதை தடுக்க முயன்ற 80 க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளை போலீஸார் கைது

  • September 23, 2023
  • 0 Comments

ராமநாதபுரம் செப். 22- ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கருங்குடி ஊராட்சி பால்குளம், ஊரவயல், கருங்குடி, வளமாவூர், மாவிலிங்கைஏந்தல் ஆகிய 5 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களுடைய வாழ்வாதாரமே விவசாயம் தான். விவசாயத்தை நம்பியே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் நாரை பறக்க முடியாத 48 மடை கொண்ட ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் இருந்து பால்குளம் கண்மாய்க்கு உரிய வரத்து கால்வாய் தண்ணீர் இல்லாததால் வானம் பார்த்த பூமியான பால்குளம் கன்மாய்க்கு மழை பெய்தால் […]

இலங்கை

யாழில் தடைகளை மீறி இரத்த தான நிகழ்வு!

  • September 23, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்று சனிக்கிழமை கல்லூரி முன்றலில் நடைபெற்றது. இவ்இதத்ததான நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் பலர் பங்கேற்று இரத்ததானம் வழங்கினர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடம் தோறும் செப்டம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் இரத்ததான நிகழ்வு நடாத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் இன்றைய இரத்ததான நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் கல்வி அமைச்சினால் கல்லூரி வளாகத்துக்குள் […]

இலங்கை

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி சென்ற இளைஞன் கைது

  • September 23, 2023
  • 0 Comments

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சட்டவிரோதமாக சென்ற இளைஞரை பொலிஸார் கைது செய்தனர். கடந்த திங்கட்கிழமை தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் இலங்கை அகதி ஒருவர் வந்திறங்கி இருப்பதாக மீனவர்கள் மூலம் கடலோர பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கடலோர போலீசார் மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி படகு ஒன்றில் நடுக்கடல் மணல் திட்டில் தவித்துக் கொண்டிருந்த இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த கிஷோகரன் என்ற கிஷோர்(31) என்பவரை மீட்டனர். தொடர்ந்து மண்டபம் மறுவாழ்வு […]

வட அமெரிக்கா

மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கம் – பாதிப்பு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • September 23, 2023
  • 0 Comments

மொரோக்கோவில் அண்மையில் உலுக்கிய கடும் நிலநடுக்கத்தால் 2.8 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மலைப் பகுதிகளில் 2,930 கிராமங்கள் சேதமடைந்ததாக மொரோக்கோவின் வரவுசெலவுத் திட்டத்துக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் Faouzi Lekjaa கூறினார். இம்மாதம் 8ஆம் திகதி 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மொரோக்கோவை உலுக்கியது. மலைப்பகுதிகளில் இருந்த பலரைச் சென்றடைவதில் சவால்கள் இருந்ததாய் அதிகாரிகள் கூறியிருந்தனர். சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 60,000 வீடுகள் சேதமடைந்தன. அவற்றுள் 30 விழுக்காட்டுக்கும் அதிகமான […]

error: Content is protected !!