இலங்கை

போராட்டத்தில் இறங்கும் இலங்கை தாதியர் சங்கம்!

  • September 25, 2023
  • 0 Comments

தாதியர் அரசியலமைப்பை இரகசியமாக திருத்தும் நடவடிக்கைக்கு எதிராக நாளைய  (26.09) தினம் சுகாதார அமைச்சுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர்  மதிவத்த கூறியுள்ளார். தாதியர் பற்றாக்குறையினால் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க வேண்டிய  அதிகாரிகள் தாதியர் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான வரைவை இரகசியமாக தயாரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு நாட்டின் சுகாதார அமைப்பில் காணப்படும் குறைபாடுகளை சரி செய்வதற்கு அரசாங்கம் தேவையான […]

இலங்கை

Food city சம்பவம் : பொலிஸார் வெளியிட்டுள்ள செய்தி!

  • September 25, 2023
  • 0 Comments

பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் ஏதேனும் திருட்டு அல்லது பிற சட்டவிரோத செயல்கள் நடந்தால், பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் அந்த தரப்பினரைக் கட்டுப்படுத்தி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவிதுள்ளார். பொரளை கார்கில் Food city  விவகாரம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்படி கூறியுள்ளார். பொருட்களை திருடிய குற்றத்திற்காக சட்டத்திற்கு மாறாக எவரையும் தாக்க […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஆபத்தான எரிகற்களின் மாதிரிகளுடன் தரையிறங்கிய ஒசைரிஸ் ரெக்ஸ் விண்கலம்

  • September 25, 2023
  • 0 Comments

சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின் மாதிரிகளுடன் நாசாவின் விண்கலமொன்று வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுகோள்கள் என அழைக்கப்படும் சூரியனை சுற்றிவரும் எரிகற்களின் மாதிரிகளுடன் நாசாவின் விண்வெளி கலமொன்று அமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் தரையிறங்கியுள்ளது. இந்த மாதிரிகள் சூரிய குடும்பத்தின் உருவாக்கம் பூமி எவ்வாறு வாழக்கூடியதாக மாறியது என்பதை புரிந்துகொள்வதற்கு உதவும் என விஞ்ஞானிகள் பெரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். ஏழுவருட விண்வெளி பயண முயற்சியின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. பெனும் எனும் சிறியகோளின் மேற்பரப்பிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளுடன் […]

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் : சர்வதேச விசாரணைக்கு அவசியமில்லை – பேராயர்!

  • September 25, 2023
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையில்லை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (24.09) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தலைவர்கள் விசாரணைக்கு தலைமை தாங்கினால், அவர்கள் நேர்மையாக செயல்பட்டால், உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டறிய நேர்மையான அதிகாரிகள் மூலம் முயற்சிகளை முன்னெடுத்தால் சர்வதேச விசாரணை தேவையில்லை.  இல்லையென்றால் சர்வதேச விசாரணைக்கு செல்லுங்கள்” எனத் […]

இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் சிறப்பு நுண்கலைமானி நெறிக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளது

  • September 25, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தினால் நடத்தப்படும் சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி மற்றும் நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி இம்மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பல்கலைக்கழக அகுமதித் தேவைகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுள் குறிப்பிட்ட கற்கை நெறிகளுக்கான விசே […]

வட அமெரிக்கா

சீக்கிய தலைவர் கொலை – விசாரணையில் கவனம் செலுத்தியுள்ள கனடா

  • September 25, 2023
  • 0 Comments

சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை குறித்த விசாரணையில் இனி கவனம் செலுத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் நிஜ்ஜாரின் கொலைக்கும் சம்பந்தமிருப்பதாகக் கூறுவதை விடுத்து விசாரணைக்கு முக்கியத்துவம் கொடுக்கவிருப்பதாக அவர் கூறினார். இருநாட்டு அரசாங்கமும் உண்மையைக் கண்டறிந்து முறையான வழியில் தீர்வு காண அது வழி வகுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசதந்திரிகளைக் குறிவைத்து கனடாவில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் […]

இலங்கை

தியாக தீபம் திலீபனின் எழுச்சி ஊர்திப் பவனி யாழ்.கொடிகாமத்தில் ஆரம்பம்!

  • September 25, 2023
  • 0 Comments

தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் எழுச்சி ஊர்திப் பவனி யாழ்.கொடிகாமத்தில் நேற்றைய தினம்(24) ஆரம்பமானது. வடக்குப் முழுவதும் செல்லவுள்ள எழுச்சி ஊர்திப் பவனி கொடிகாமத்திலிருந்து ஆரம்பித்து சாவகச்சேரி, பூநகரி,முழங்காவில், மன்னார், வவுனியா ஊடாக பயணித்து கிளிநொச்சியை வந்தடைந்து 26 ஆம் திகதி யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை வந்தடையவுள்ளது.

இலங்கை

மன்னார் மாணவன் திடீர் மரணம் – சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட உடல் உறுப்புகள்

  • September 25, 2023
  • 0 Comments

பேராதனை பல்கலைக்கழக பல் மருத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் துரதிஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மன்னார் முருங்கன் பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய எஸ்.திவின் சாகித்தியன் என்ற பல்கலைக்கழக மாணவரே கடந்த 22 ஆம் திகதி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்திருந்தார். சடலத்தின் மீதான பிரேத பரிசோதனையின் பின்னர், பேராதனை வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர் பிரபாத் சேனசிங்க தலைமையில் உரிய திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. இதேவேளை, […]

இலங்கை

மக்களை அடக்குவதற்கு இலங்கையில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

  • September 25, 2023
  • 0 Comments

மக்களை அடக்குவதற்கே இலங்கை அரசு புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய முனைகிறது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார். திருகோணமலை மக்கேசர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு வருகை தந்த போது நிகழ்வு முடிவுற்றதையடுத்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் ஒன்லைன் சேப்டி கொமிஷன் என்பது நாட்டினுடைய ஜனாதிபதி இந்த கொமிஷன் சபைக்கு ஐந்து பேரை நியமிப்பார். அந்த ஐந்து […]

பொழுதுபோக்கு

மீண்டும் இணையும் சமந்தா – நாக சைதன்யா? வைரல் நியுஸ்

  • September 25, 2023
  • 0 Comments

2017ல் நடிகர் நாக சைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகள் சிறப்பாக வாழ்க்கை செல்ல, சமந்தாவுக்கு நாக் சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட 2021ல் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இருவரும் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்து பிஸியாக இருந்து வந்தனர். நாக சைதன்யா நடிகை சோபிதாவுடனும், சமந்தா நடிகர் விஜய் தேவரகொண்டாவுடனும் நெருக்கமாக பழகி வந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் கூறி திருமணமும் செய்யவுள்ளார்கள் என்று கூறப்பட்டது. நடிகை சமந்தாவுக்கு […]

error: Content is protected !!