இலங்கை

வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக பகிர்ந்தளிக்க தீவிர கண்காணிப்பு

  • December 13, 2025
  • 0 Comments

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுவரும் நிவாரணப் பொருட்களை முறையாக பகிர்ந்தளிக்க அரசாங்கம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தால் (NDRSC) இயக்கப்படும் ஒருகொடவத்தை களஞ்சியசாலை வளாகத்திற்கு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிவாரண உதவிகளின் சேமிப்பு மற்றும் விநியோக நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். இந்த விஜயத்தின் போது, பிரதி அமைச்சர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களின் விநியோக ஏற்பாடுகள் […]

அரசியல் இலங்கை செய்தி

18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடக்கப்போவது என்ன?

  • December 13, 2025
  • 0 Comments

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கான விசேட கூட்டமொன்று எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதென தெரியவருகின்றது. அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் சபாநாயகர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். எதிர்வரும் 18 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற கூட்டம் நடைபெறவுள்ள நிலையிலேயே மேற்படி சந்திப்பும் இடம்பெறுகின்றது. அத்துடன், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவும் கூடவுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் நோக்கிலேயே கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமருக்கு நாமல் நன்றி தெரிவிப்பு!

  • December 13, 2025
  • 0 Comments

விசேட நாடாளுமன்ற அமர்வை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் விசேட கூட்டத்தொடர் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும் என்று சபாநாயகர் இன்று அறிவித்தார். வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடருக்கு பின்னர் 2026 ஜனவரி 6 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. எனினும், பிரதமர் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் அவசர நாடாளுமன்ற அமர்வை கூட்டுவதற்கு ஏற்பாடு உள்ளது. அதற்கமையவே நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது. அதேவேளை, பேரிடர் தொடர்பில் விவாதிப்பதற்கு நாடாளுமன்ற […]

அரசியல் இலங்கை செய்தி

அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட தயார்: மனோ அறிவிப்பு!

  • December 13, 2025
  • 0 Comments

“பாதுகாப்பான வதிவிட காணி” என்ற உரிமையை பெறுவதற்கு ஆளுங்கட்சி மலையக பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட தயார்.” இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை இன்று விடுத்தே மனோ கணேசன் எம்.பி. இவ்வாறு கூறியுள்ளார். “இதற்கு முன் நடைபெற்ற அவலங்களை விட இந்த முறை அவலம் அவதானத்துக்கு உரியது என நான் நம்புகிறேன். ஏறக்குறைய பெரும்பாலான மலை பகுதிகளிலும் மலை பாறைகள், மலை மேடுகள், தரை நிலங்கள் வெடித்து உள்ளன. இடைவெளிகளில் […]

உலகம்

இந்தியா மீதான 50 சதவீத வரி – அமெரிக்க எம்.பி.க்கள் மூவர் எடுத்துள்ள தீர்மானம்

  • December 13, 2025
  • 0 Comments

ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அரசு கடுமையான வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால், அமெரிக்காவில் இந்திய பொருட்களில் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனிடையே, இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் பல்வேறு சுற்று […]

உலகம்

தொடரும் பதற்றம் : மீண்டும் தாக்குதலை தொடங்கிய தாய்லாந்து!

  • December 13, 2025
  • 0 Comments

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான போர் இன்று மாலை முடிவடையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், தாய்லாந்து மற்றொரு தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து போர் விமான இலக்குகள் மீது இந்தத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. “எங்கள் பிரதேசமும் மக்களும் இனி பாதிக்கப்படவோ அச்சுறுத்தப்படவோ இல்லை என்று நாங்கள் உணரும் வரை இராணுவ நடவடிக்கை தொடரும்” என்று தாய்லாந்து பிரதமர் அனுடின் சான்விரகுல் உறுதிப்பட தெரிவித்துள்ளார். தொடர்புடைய செய்தி,  தாய்லாந்து, கம்போடியாவில் அமைதி திரும்பும் […]

இலங்கை

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கைச்சாத்தான முக்கிய ஒப்பந்தம்

  • December 13, 2025
  • 0 Comments

இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று (12) இத்தாலியின் ரோம் நகரில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இலங்கை அரசாங்கம் சார்பில் இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் சத்யா ரொட்ரிகோவும், இத்தாலி அரசாங்கம் சார்பில் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான பிரதி அமைச்சரும் அரச செயலாளருமான மரியா திரிபோடியும் இந்த […]

விளையாட்டு

இறுதிப் போட்டியில் பங்கேற்கும் மல்யுத்த வீரர் ஜோன் சீனா (John Cena) !

  • December 13, 2025
  • 0 Comments

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இரசிகர்களால் மல்யுத்த ஜாம்பவான் என்று போற்றப்படும் அமெரிக்க மல்யுத்த சாம்பியன் ஜான் சீனா (John Cena)  , இன்று (13) தனது இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்தப் போட்டி அமெரிக்க நேரப்படி நாளை (14) காலை நடைபெறும். அதன்படி, ஜான் சீனாவின் 20 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை வாழ்க்கை இந்த போட்டியுடன் முடிவடையவுள்ளது. இறுதிப் போட்டியில் அவர்  ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த ‘GUNTHER’  ஐ எதிர்கொள்ளவுள்ளார். ஜான் சீனா, […]

இலங்கை செய்தி

டித்வா புயல் – பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுக்கும் அதிகாரிகள்!

  • December 13, 2025
  • 0 Comments

‘டித்வா’ சிறு புயல்களால் பாதிக்கப்பட்ட நிலங்களின் கணக்கெடுப்பை நடத்துவதில் காணி ஆணையர் துறை கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நிலங்களைப் பாதுகாக்கப்பட்டதாக மாற்றிய பின், அந்த நிலங்களை மீண்டும் அளவிட வேண்டும் என்று காணி ஆணையர் ஜெனரல் சந்தன ரணவீர ஆராச்சி கூறுகிறார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், அபாய வலயங்களில் அமைந்துள்ள நிலங்களைப் பாதுகாக்க முடிவு செய்யப்பட்டால், மானிய அனுமதி பெற்ற நிலங்களின் மதிப்பை மதிப்பிடுவதற்கும் இழப்பீடு வழங்குவதற்கும் அல்லது நிலத்தைத் […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களுக்கு Golden Card Visa – ட்ரம்பின் புதிய திட்டம் நடைமுறைக்கு 

  • December 13, 2025
  • 0 Comments

அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது உலகம் முழுவதும் பலரதும் கனவு. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளிநாட்டவர்கள் தங்கி வேலை செய்வதையும் குடியேறுவதையும் கடுமையானதாக மாற்றியுள்ளது. இதனால் விசா பெறுவது கடினமாகவும், ஏற்கனவே அமெரிக்காவில் உள்ளவர்கள் கூட தங்களது நிலையை பாதுகாத்து நிம்மதியாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில்ன் ட்ரம்ப் நிர்வாகம் Golden Card Visa எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கோல்ட் கார்டு விசா (Golden Card Visa )என்றால் என்ன? இந்த […]

error: Content is protected !!