திருவனந்தபுரம் மாநகராட்சியில் முதன் முறையாக பாஜக வெற்றி – மோடி நன்றி
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் முதன் முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதற்காக கேரள மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். கேரளத்தில் யுடிஎப் மற்றும் எல்டிஎப் ஆகிய கட்சிகளால் மக்கள் வெறுப்படைந்துள்ளதாக தெரிவித்த அவர் நல்லாட்சியை வழங்கவும், அனைவருக்கும் வாய்ப்புகளைக் கொண்ட கேரளத்தை உருவாக்கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமே ஒரே வழியென மக்கள் தீர்மானித்ததாகவும் பிரதமர் […]













