அரசியல் இலங்கை செய்தி

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?

  • December 16, 2025
  • 0 Comments

பொலிஸ் விசாரணை முடிவடைந்து அது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இடம்பெறும். ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க எம்.பி. மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். விபத்து சம்பவமொன்று தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மதுபோதையில் வாகனம் செலுத்தியே விபத்தை ஏற்படுத்தியுள்ளார் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் அசோக ரன்வலவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என தேசிய மக்கள் […]

உலகம்

போண்டி துப்பாக்கிச்சூடு சம்பவம் – இஸ்லாமிய சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்ட தாக்குதல்தாரிகள்!

  • December 16, 2025
  • 0 Comments

சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இரண்டு துப்பாக்கிதாரிகள் கடந்த மாதம் பிலிப்பைன்ஸுக்குப் பயணம் செய்துள்ளதாக காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர். அவர்களின் பயணத்திற்கான காரணங்களை வெளியிடாத காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர். துப்பாக்கிதாரிகள் இஸ்லாமிய அரசின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும் அவர்களில் ஒருவர் பயன்படுத்திய வாகனத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு இஸ்லாமிய அரசின் கொடிகளைக் கண்டுபிடித்துள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை

அரச அதிகாரிகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்க நடவடிக்கை!

  • December 16, 2025
  • 0 Comments

வெள்ளம், மண்சரிவு மற்றும் சாலை அடைப்புகள் காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச அதிகாரிகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் இன்று (16) அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இந்த சிறப்பு விடுமுறையைப் பெற, பாதிக்கப்பட்ட அதிகாரிகள் தங்கள் நிறுவனத் தலைவரிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதில் அவர்கள் […]

உலகம் செய்தி

உக்ரைன், ரஷ்யா போர் முடிவுக்கு வரும் சாத்தியம்: ட்ரம்ப் கூறுவது என்ன?

  • December 16, 2025
  • 0 Comments

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய முயற்சியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். உக்ரைன் ஜனாதிபதி, பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் நேட்டோ தலைவர்களுடன் இது தொடர்பில் தான் விரிவான கலந்துரையாடலிலட் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். ஐரோப்பிய தலைவர்களிடமிருந்து எமக்கு பேராதரவு கிடைக்கின்றது. அவர்களை போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புகின்றனர் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார். மேற்குலக நாடுகள் தமக்குரிய பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கும் பட்சத்தில் நேட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தை […]

இலங்கை செய்தி

வெளிநாட்டு உதவி, விநியோக ஏற்பாடு குறித்து விசேட கூட்டம்!

  • December 16, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு கிடைக்கப்பெறும் வெளிநாட்டு உதவிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிடைக்க பெற்று வரும் வெளிநாட்டு மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக வெளிநாட்டு மனிதாபிமான உதவி ஒருங்கிணைப்புக்கான உயர் மட்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு தனது மூன்றாவது கூட்டத்தை அனர்த்த முகாமைத்துவ நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செயலகத்தில் நேற்று நடத்தியது. இதன்போதே மேற்படி விவகாரம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவே மேற்படி குழுவுக்கு தலைமை […]

இலங்கை செய்தி

இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு கனடா ஆதரவு!

  • December 16, 2025
  • 0 Comments

இலங்கையை மீளக் கட்யெழுப்பும் வேலைத்திட்டத்துக்கான ஒத்துழைப்பு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும், இலங்கைக்கான கனடா தூதுவருக்கும் இடையிலான சந்திப்பின்போதே இது பற்றி பேசப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள அலரிமாளிகையில் நேற்று மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது . டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து பேசப்பட்டது என்று பிரதமர் தெரிவித்தார். அத்துடன் விவசாயத் துறை மற்றும் எதிர்கால ஆசிரியர்-மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட கல்வித் துறையிலான ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையை மீளக் […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடர் நிவாரணம்: கட்சி நிதியை ஜே.வி.பி. பயன்படுத்தாதது ஏன்?

  • December 16, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமது கட்சி நிதியை ஜே.வி.பி. ஏன் இன்னும் பயன்படுத்தாமல் உள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாமர சம்பத் எம்.பி. கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு. “ பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பண்டாரநாயக்க நிதியத்தில் இருந்து 25 கோடி ரூபாவை சந்திரிக்கா அம்மையார் வழங்கினார். பண்டாரநாயக்க நிதியத்தில் எமது கட்சிக்கும் பங்களிப்பு உள்ளது. எனவே, சந்திரிக்காவின் நடவடிக்கை எமக்கு பெருமை அளிக்கின்றது. […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிட்னி தாக்குதலின் எதிரொலி: துப்பாக்கிச் சட்டத்தை கடுமையாக்க ஒப்புதல்!

  • December 16, 2025
  • 0 Comments

துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்குவதற்கு ஆஸ்திரேலியாவின் தேசிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சிட்னி, போண்டியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஆஸ்திரேலிய பிரஜைகள் மட்டுமே துப்பாக்கி உரித்தை பெறும் வகையில் சட்டம் வரவுள்ளது. ஆஸ்திரேலிய மத்திய அரசாங்கத்தின் பிரதமர் அந்தோனி அல்பானீஸி தலைமையிலேயே நேற்று தேசிய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. மாநில பிரீமியர்கள் மற்றும் பிராந்திய முதல்வர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போதே துப்பாக்கி உரித்து தொடர்பான நடைமுறைகளை வலுப்படுத்தவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. தேசிய […]

புகைப்பட தொகுப்பு

ரசிகர்கள் மனசைக்கவரும் வகையில் வினுஷா தேவி, கருப்பு நிற மோடர்ன் உடையில்.

  • December 16, 2025
  • 0 Comments

பாரதி கண்ணம்மா வினுஷாதேவி, மோடர்ன் உடையில் போட்டோஷூட் செய்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது கருப்பு நிற கவுனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் உள்ளதை கவர்ந்துவருகிறார்.      

error: Content is protected !!