ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவை உலுக்கிய சம்பவம்: 15 பேர் பலி: துப்பாக்கிதாரிகள் அடையாளம்!

  • December 15, 2025
  • 0 Comments

சிட்னியில் யூத சமூகத்தை இலக்கு வைத்து 50 வயதான சஜிட் அக்ரம் மற்றும் 24 வயதான நவீட் அக்ரம் ஆகியோரே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் தந்தை மற்றும் மகன் என தெரியவந்துள்ளது. 50 வயதான நபர் உரிமம் பெற்ற ஆறு துப்பாக்கிகளை வைத்திருந்தார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. சிட்னி போண்டி கடற்கரையில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 10 வயது சிறுமி உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் வைத்தியசாலையில் […]

இலங்கை செய்தி

“கடற்படைக்குப் பாராட்டு” – திருகோணமலையில் ஜனாதிபதி உரை

  • December 14, 2025
  • 0 Comments

மரியாதைக்குரிய, ஒழுக்கமான மற்றும் துணிச்சலான படையான கடற்படையில் இணைந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். திருகோணமலையில் (13) சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 40 ஆவது ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்பட்ட இடைநிலை அதிகாரிகள், 65 ஆவது ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்பட்ட இடைநிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறிச் செல்லும் விடுகை அணிவகுப்பில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த நாட்டில் மிகவும் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய திட்டமிடல் சட்ட ஆலோசகர் விலகல்: அரசாங்கத்தில் குழப்பம்.

  • December 14, 2025
  • 0 Comments

பிரிட்டனின் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதித் திட்டங்களுக்காகத் திட்டமிடல் சட்டங்களை மாற்றுவதற்கான நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸின் (Rachel Reeves) முயற்சிக்கு ஆலோசகராக இருந்த சிரேஷ்ட வழக்கறிஞர் கத்ரின் கௌவார்ட் (Catherine Howard), நான்கு மாதங்களுக்குப் பிறகு அரசாங்கத்தை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திட்டமிடல் விதிமுறைகளை ஒதுக்கித் தள்ளி, பெரிய திட்டங்களை உடனடியாகத் தொடங்க அரசாங்கம் மேற்கொண்ட தீவிரமான முயற்சிகளுக்கு எதிராக அவர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்துக் கருத்து வேறுபாடுகள் நிலவும் சூழலில் இவரின் […]

இலங்கை செய்தி

கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கான உபகரணங்கள் கையளிப்பு!

  • December 14, 2025
  • 0 Comments

பாதுகாப்பு அமைச்சினால் பெறப்பட்ட ஒரு தொகை உதவிப் பெருட்கள் ( 13) கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது. அவசர சிகிச்சைக்குரிய (ICU) படுக்கைகள், சக்கர நாற்காலிகள் மற்றும் குழந்தை தொட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் இவற்றில் அடங்கும். இது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை, நோயாளிகளின் நடமாட்டம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகளை மேட்கொள்ள மேலும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நன்கொடை பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவர் Dr. (திருமதி) ருவினி ரசிகா பெரேராவினால் வைத்தியசாலையின் […]

உலகம் செய்தி

கனடாவில் 6,000 திறமையான தொழிலாளர்களுக்கு கனடா நிரந்தர வதிவிட அழைப்பு

  • December 14, 2025
  • 0 Comments

கனடாவில் நிரந்தர வதிவிட உரிமம்: 6,000 திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு சுமார் 6,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமத்துக்கு விண்ணப்பிக்க கனடா அழைப்பு விடுத்துள்ளது . கனடா அரசு, கனேடியன் எக்ஸ்பிரியன்ஸ் க்ளாஸ் எக்ஸ்ப்ரஸ் என்ட்ரி (Canadian Experience Class Express Entry) திட்டத்தின் கீழ், வெளிநாட்டுத்திறமையான தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமத்திற்கான விண்ணப்ப அழைப்புகளை வழங்கியுள்ளது. இதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட நிரந்தர வதிவிட […]

உலகம் செய்தி

முதியோர் படுக்கை தட்டுப்பாடு: மருத்துவமனைக்குள் 3,000 பேர் அவதி!

  • December 14, 2025
  • 0 Comments

அவுஸ்ரேலியாவில் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படத் தகுதியான 3,000க்கும் மேற்பட்ட முதியோர் பராமரிப்பு நோயாளிகள், முதியோர் பராமரிப்பு படுக்கைகள் இல்லாததால் பொது மருத்துவமனைகளிலேயே சிக்கித் தவிக்கின்றனர். மூன்று மாதங்களில் இந்த எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்சினை காரணமாக வரி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு $1.2 பில்லியன் செலவு ஏற்படுவதாக மாநில அரசுகள் தெரிவிக்கின்றன. இந்த நோயாளிகள் கீழே விழுதல் மற்றும் மனநலப் பிரச்சினைகளுக்கும் உள்ளாகின்றனர். அவுஸ்ரேலியா மத்திய சுகாதார அமைச்சர் Mark Butler, இது ஒரு தீவிரமான தேசியப் […]

உலகம் செய்தி

எரிசக்திச் செலவு: டோமாகோ அலுமினிய ஆலைக்கு அவுஸ்ரேலிய அரசு உதவி.

  • December 14, 2025
  • 0 Comments

அவுஸ்ரேலியாவின் முக்கிய டோமாகோ அலுமினிய உருக்காலை மூடப்படும் (Tomago Aluminium Smelter) அபாயத்தில் இருந்து மீண்டுள்ளது. அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள் காரணமாக ஆலை மூடப்படும் என்று அதன் உரிமையாளர் ரியோ டின்டோ (Rio Tinto) அறிவித்திருந்தார். இந்நிலையில், பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ( Anthony Albanese) தலைமையிலான மத்திய அரசு ஒரு முக்கிய ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், வரி செலுத்துவோரின் நிதியைப் பயன்படுத்தி மலிவு விலையில் மின்சாரம் வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்த நடவடிக்கை […]

உலகம் கருத்து & பகுப்பாய்வு செய்தி

மூன்றாம் உலகப்போர் அபாயம் – ரஷ்யா, உக்ரைன் போர் குறித்து ட்ரம்ப் எச்சரிக்கை.

  • December 14, 2025
  • 0 Comments

உலக அரசியலில் மீண்டும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள கருத்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இது மூன்றாவது உலகப்போருக்கு வழிவகுக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், போரின் கொடூரம் மற்றும் அதனால் ஏற்படும் மனித இழப்புகளை சுட்டிக்காட்டி, உலக நாடுகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். ரஷ்யா–உக்ரைன் போர் உலக அரசியல் அரங்கில் […]

உலகம் செய்தி

இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் தளபதி பலி – அமெரிக்கா தலையிட வேண்டும் என வலியுறுத்தல்

  • December 14, 2025
  • 0 Comments

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹமாஸ் தனது மூத்த தளபதி ரேத் சாத் கொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது ஹமாஸ் தளபதி சாத்தின் கொலை உறுதி செய்யப்பட்டுள்ளதாக, ஹமாஸின் காசா தலைவர் கலீல் அல்-ஹய்யா தெரிவித்துள்ளார். இந்த கொலை உட்பட, இஸ்ரேல் தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துகிறது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். போர்நிறுத்தம் ஒக்டோபரில் ஆரம்பமானதிலிருந்து, இஸ்ரேல் காசா மீது சுமார் 800 தாக்குதல்கள் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் சுமார் 386 பேர் உயிரிழந்துள்ளதாகவும் […]

இந்தியா செய்தி

ஆட்கடத்தல் – மும்பையில் 80 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் மாயம்

  • December 14, 2025
  • 0 Comments

இந்தியாவின் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த 36 நாட்களில் 82 சிறுவர்கள் காணாமற் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட 41 சிறுமிகளும் 13 சிறுவர்களும் காணாமல் போயுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுமிகளும் சிறுவர்களும் காணாமல் போனவர்களில் அடங்குவர். இந்த சம்பவங்களுக்குப் பின்னால் மனித கடத்தல் இருப்பதாக இந்திய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குர்லா, வகோலா, பவாய், மால்வானி, சகினாகா போன்ற நகரின் பல்வேறு பொலிஸ் […]

error: Content is protected !!