பிரிந்த காதலர்களின் பெயரை கரப்பான் பூச்சிக்கு வைக்க வாய்ப்பு வழங்கும் அமெரிக்கா
அமெரிக்க மிருகக்காட்சிசாலை ஒன்றில் பெப்ரவரி 14ம் திகதி கொண்டாடப்படும் காதலர் தினத்தை யொட்டி வித்தியாசமான வாய்ப்பு ஒன்றை வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் காதலன்/காதலியின் பெயரில் கரப்பான் பூச்சி ஒன்றிற்கு பெயரிடும் வாய்ப்பை இவ்வாறு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மிருகக்காட்சிசாலை வழங்குகிறது.
அதற்காக 10 அமெரிக்க டொலர்கள் அரவிடப்படுவதாகவும் , அதன் பின் அவர்களுக்கு டிஜிட்டல் அட்டை ஒன்று வழங்கப்படும் .
அதனை முன்னாள் காதலர்களுக்கு அனுப்பி , இவ்வாறு இந்த கரப்பான் பூச்சி அவர்களின் பெயரில் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்க முடியும் என மிருகக்காட்சிசாலை தெரிவிக்கிறது .
காதல் தோல்வியில் மனமுடைந்து உள்ளவர்களுக்கு இது சற்று ஆறுதல் அளிக்கும் . இதன் மூலம் சேகரிக்கப்படும் பணம் மிருகக்காட்சிசாலை மிருகங்களுக்கு உணவு வழங்க பயன்படுத்தப்படும் எனவும் டெக்சாஸ் மிருகக்காட்சிசாலை உரிமையாளர் தெரிவித்துள்ளார் .