இலங்கையில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் நேற்று (05) மரக்கறிகளின் விலையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதன்படி, 1 கிலோகிராம் கரட்டின் விலை 690 ரூபாயாக பதிவு செய்யப்பட்டது.
அதேபோன்று 1 கிலோகிராம் வெண்டைக்காய் 490 ரூபாயாகவும், கோவாவின் விலை 390 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் 1 கிலோகிராம் போஞ்சி 600 ரூபாயாகவும், 1 கிலோகிராம் லீக்ஸ் 490 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 9 times, 1 visits today)