அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்ப்பு ஊர்வலம் : கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சஜித் வருகை
சமகி ஜன பலவேகய (SJB) ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட இருவர் அனுமதிக்கப்பட்ட பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜ்த் பிரேமதாச இன்று (ஜன. 30) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
இன்று அதிகாலை, சமகி ஜன பலவேகய எதிர்ப்பாளர்களைக் கலைக்கும் முயற்சியில் பொலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கிகளை வீசியதில் காயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறிது நேரத்தின் பின்னர், ஆர்ப்பாட்ட பேரணியின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுகவீனமடைந்ததையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஏனைய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கூட்டாளிகளின் பங்கேற்புடன் சமகி ஜன பலவேகய அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தியது.