பிரித்தானிய தபால் துறை தலைவர் பதவி விலகல்
நூற்றுக்கணக்கான துணை போஸ்ட் மாஸ்டர்கள் தவறுதலாக தண்டிக்கப்பட்ட ஊழலைச் சுற்றி நடந்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் தபால் அலுவலகத் தலைவர் பதவி விலகியுள்ளார்.
ஹென்றி ஸ்டாண்டனை பதவியை விட்டு விலகுமாறு வணிக செயலாளர் கெமி படேனோக் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. .
விரைவில் தற்காலிக தலைவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவில் தபால் துறையில், sub-postmaster என்னும் பொறுப்பிலிருந்த சுமார் 700க்கும் மேற்பட்ட தபால் அலுவலகப் பணியாளர்கள் மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களில் சிலர் தற்கொலை வரை சென்றனர்.
2010ஆம் ஆண்டு.தபால் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் Horizon என்னும் சாஃப்ட்வேரின் குளறுபடியால்தான் இந்த தபால் அலுவலக ஊழியர்கள் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.