சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 25 ஆண்டுகள் சிறை
12 வருடங்களுக்கு முன்னர் மைனர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இன்று (31) கடூழிய வேலையுடன் கூடிய 25 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
செவாநகர – மஹகம காலனி பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு 3 தடவைகள் சந்தேகநபரால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவருக்கு எதிராக செவாநகர பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சந்தேகநபருக்கு இருபத்தைந்தாயிரம் ரூபா அபராதத்துடன் 2 இலட்சம் ரூபா நட்டஈடாக சிறுமிக்கு வழங்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி புத்திக சி.ராகல உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 5 times, 1 visits today)