ரஷ்யாவின் அடுத்த திட்டத்தை தகர்த்தெறிந்த பிரித்தானியா!
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள சபோர்ஷியா பகுதியில் உள்ள அதிகாரிகள், ஆக்கிரமிக்கப்பட்ட மெலிடோபோலை, பிராந்தியத்தின் தலைநகராக அறிவிக்கும் ஆணையை வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவால் நிறுவப்பட்ட பிராந்தியத்தின் தலைவர் எவ்ஜெனி பாலிட்ஸ்கி, சபோரிஜியா நகரம் ரஷ்யாவால் கட்டுப்படுத்தப்படும் வரை இந்த நடவடிக்கை தற்காலிக நடவடிக்கை என்று கூறியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த ஆண்டு ரஷ்யா ஜனாதிபதி புடின், நான்கு உக்ரேனிய பகுதிகளை ரஷ்யாவிற்குள் உள்வாங்கும் சட்டங்களில் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)