இலங்கை

பாகிஸ்தான் சித் மாநிலத்திற்கு வருகை தருமாறு கிழக்கு மாகாண ஆளுநருக்கு அழைப்பு!

சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் பாகிஸ்தான் நாட்டின் சிந் மாநில முதலமைச்சர் மக்பூல் பக்காருக்கும், இடையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில், இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் மேசன்,ஆடை தொழிற்சாலை,மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி துறை உட்பட பல நிறுவனங்களில் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர்.

அவர்கள் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு செந்தில் தொண்டமான் கொண்டு சென்றார்.

செந்தில் தொண்டமான் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக முதலமைச்சர் மக்பூல் பக்காரு ஒப்புக்கொண்டதுடன், பாகிஸ்தானில் உள்ள சித் மாநிலத்திற்கு வருகை தருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு உத்தியோகபூர்வ அழைப்பும் விடுத்துள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் (SDG) அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் இலங்கையிலிருந்து பாகிஸ்தானிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்