அரசியல் அமைப்பில் மாற்றத்தை கொண்டுவர தீர்மானம் – அணித்திரண்ட ஜப்பான் மக்கள்!
ஜப்பானின் சமாதானக் கொள்கை சார்ந்த அரசியலமைப்பைத் திருத்துவதற்கான பிரதமர் சனே டகாயிச்சியின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக்கான மக்கள் டோக்கியோவில் ஒன்றுக்கூடியுள்ளனர்.
1947 அரசியலமைப்பின் 9வது பிரிவில் செய்யப்படும் மாற்றங்களை எதிர்த்தே மக்கள் ஒன்றுக்கூடி போராட்டம் நடத்தியுள்ளனர்.
குறித்த பிரிவானது போரைத் துறந்து, நாட்டின் இராணுவத் திறன்களைக் கட்டுப்படுத்துகிறது. இதில் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றங்களை செய்ய பிரதமர் சனே டகாயிச்சி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஜப்பான் தற்காப்புப் படைகளை முறையாக அங்கீகரிக்கவும், சீனா மற்றும் வட கொரியா போன்ற நாடுகளிடமிருந்து வரும் தற்காலப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் அரசியலமைப்பைப் புதுப்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜப்பானில் ஒரு அரசியலமைப்புத் திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையும், ஒரு தேசிய பொது வாக்கெடுப்பும் தேவைப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு தேவையான ஆதாரவை பெற லிபரல் டெமோக்ரடிக் கட்சியும் (LDP) அதன் கூட்டணிகளும் ஒருங்கிணைந்து செயற்படுகின்றன.




