கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவரின் மோசமான செயல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 6 இலட்சம் பெறுமதியான பொருட்களுடன் பையை திருடிய பெண்ணொருவரை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த பெண் வேறு நாட்டிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நிலபொல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 4 times, 1 visits today)