இலங்கை

கல்வியங்காட்டில் வீட்டிலிருந்தவரை கட்டி வைத்து கத்தி முனையில் கொள்ளை முயற்சி!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு ட்பட்ட கல்வியங்காடு பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை 2 மணிளவில் வீட்டின் கூரையை பிரித்து முகமூடி அணிந்தவாறு வீட்டிற்குள் இறங்கிய மூவரடங்கிய கும்பல் வீட்டில் உறக்கத்தில் இருந்தவரை தட்டி எழுப்பி இரண்டு கைகளையும் கயிற்றினால் கட்டிவைத்து கழுத்தில் கத்தினை வைத்து எங்கே நகையுள்ளது என மிரட்டி அரை மணி நேரமாக குறித்த கும்பல் அடாவடிபுரிந்துள்ளது

எனினும் குறித்த நபர் கூக்குரல் இட்டு அயலவர்கள் வீட்டு விளக்கை ஒளிர விட்டதன் காரணமாக அச்சுறுத்தியகும்பல் தாங்கள் கொண்டு வந்த பெரிய கத்தியினையும் விட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான கோப்பாய் குற்ற த்தடுப்பு பொலிஸ் பிரிவு வினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!