HIV தொற்றுக்குள்ளானவர்களுக்கு புதிய சிகிச்சை!
இலங்கையில் HIV அபாயத்தைத் தடுப்பதற்காக ‘Prep” எனும் புதிய வகை சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய HIV தடுப்பு குழு தெரிவித்துள்ளது.
மேலும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து HIV கட்டுப்பாடு சிகிச்சை மையங்களிலும் இந்த சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்தார்.
அந்த மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் அனைத்தும் HIV தொற்றுடன் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் HIV தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(Visited 9 times, 1 visits today)