இலங்கை

இலங்கையில் 7 வயது சிறுமிக்கு 15 வயது சிறுவன் செய்த கொடூரம்!

தங்கொட்டுவ பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

15 வயதுடைய சிறுவன் ஒருவரே இந்த அதிர்ச்சி செயலை செய்துள்ளார்.

தங்கொடுவ – தும்மலகொடுவ பிரதேசத்தை சேர்ந்த இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வன்புணர்வுக்குள்ளான சிறுமி தங்கொட்டுவ – அடியாவல பிரதேசத்தில் உள்ள தொழிலாளி ஒருவரின் வீட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தங்கொடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!