மதுவைக்கொண்டு கிளிநொச்சியை அழிக்கும் அரசாங்கம்
கிளிநொச்சி மாவட்டத்தை இலங்கை அரசாங்கம் மதுவினால் அழித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்த கட்சியின் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் இதனை தெரிவித்தார்.
இந்தப் பணிக்கு அரசு இயந்திரங்களும், அரசு அதிகாரிகளும் ஒத்துழைத்துள்ளனர் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அக்கராயன் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானசாலையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
(Visited 14 times, 1 visits today)





