பிரான்ஸ் வாகன சாரதிகள் தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்
பிரான்ஸில் வாகன சாரதிகளில் பத்தில் நால்வர் குறிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக வாகனத்தைச் செலுத்துவதாக தெரியவந்துள்ளது.
புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் அந்த விடயம் தெரியவந்துள்ளது.
இன்னும் துல்லியமாக, 42% சதவீதமானோர் அதிவேகமாக பயணிக்கின்றனர்.
130 கிலோ மீற்றர் வேகம் உள்ள சாலைகளில் 137 அல்லது 140 கி.மீ வேகத்தில் பயணிக்கின்றனர். இவர்களில் 3% சதவீதமானவர்கள் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பயணிக்கின்றனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் 38% சதவீதமானோர் குறிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமாக பயணித்திருந்தனர்.
(Visited 10 times, 1 visits today)