கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் வைத்து மாணவிக்கு ‘பட்டம்’ மறுப்பு! அட காரணம் இதுவா
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான பிலடெல்பியா கல்லூரியில் நடைப்பெற்ற பட்டமளிப்பு விழாவின் போது மாணவி ஒருவருக்கு கல்லூரி முதல்வர் பட்டம் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
அப்துல் ரஹ்மான் என்ற மாணவிக்கே கல்லூரி முதல்வர் பட்டம் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பட்டமளிப்பு விழா மேடையில் மாணவிகளுக்கு வரிசையாக பட்டங்களை கல்லூரி முதல்வர் வழங்கிக்கொண்டிருக்கும் போது அப்துல் ரஹ்மான் என்ற மாணவியின் பெயர் அழைக்கப்பட்டது.
தன் பெயரைக் கேட்டதும் உற்சாகமடைந்த மாணவி, மேடையில் ஏறியபடி சிரித்து நடனமாடியபடியே மேடையை நோக்கிச் சென்றார். கல்லூரி முதல்வரை அணுகிய அவர், அவரைப் பார்த்து சிரித்துப் பட்டம் பெற முயன்றார்.
ஆனால் அவருக்கு கல்லூரி முதல்வர் பட்டம் வழங்கப்படவில்லை. மாறாக,மாறாக மேடைக்கு வரும் போது ஆடிக்கொண்டு வந்ததால், பட்டத்தை வழங்க மறுத்து கீழே போட்டுள்ளார் அதிர்ச்சியடைந்த மாணவி வேறு வழியின்றி இருக்கைக்குத் திரும்பினார்.