பிரிட்டன், ஜப்பானுக்கிடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
பிரிட்டனும், ஜப்பானும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், 18 பில்லியன் பவுண்டுகள் (£18bn) மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளன.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள G7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, பிரிட்டன் பிரதமர் Keir Starmer , ஜப்பானிய பிரதமர் Sanae Takaichi ஞாயிற்றுக்கிழமையன்று டவுனிங் ஸ்ட்ரீட்டில் Downing Street வரவேற்றுப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, 9 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான கடலோர காற்று ஆலை ஒப்பந்தம் உட்பட, வணிக மற்றும் அரசாங்க ரீதியிலான 10-க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் Rolls-Royce நிறுவனம் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக, ஜப்பானின் அணுசக்தி முகமையுடன் கொண்டுள்ள கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் புதிய ஒப்பந்தமும் இதில் அடங்கும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து விவாதிப்பதற்காக ஜப்பான் மற்றும் பிரித்தானியாவின் முன்னணி வர்த்தகத் தலைவர்களும் இச்சந்திப்பில் இணையவுள்ளனர்.




