அமைதி ஒப்பந்தத்தை நாடும் ஈரான்: ட்ரம்ப் தகவல்!
அமைதி ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு ஈரான் உண்மையாகவே விரும்புகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
“ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள உண்மையில் விரும்புகிறது. அது அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுடன் துணை நிற்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஓர் ஒப்பந்தமாக இருக்கும்.
ஆனால் இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட விரும்புபவர்கள், நான் இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும், இன்னும் மெதுவாகச் செயல்பட வேண்டும்,
போருக்குச் செல்ல வேண்டும், போரைத் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
இறுதியில் அனைத்தும் நல்லபடியாகவே முடியும். எப்போதும் அப்படித்தான் நடக்கிறது” எனவும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.




