குறைந்த நிதி ஒதுக்கீடு!! கடந்தகால படிப்பினைகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!
எபோலா தொற்றை கட்டுப்படுத்த கடந்தகாலத்தோடு ஒப்பிடுகையில் பிரித்தானியா இம்முறை குறைந்த அளவிலான நிதியை ஒதுக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
2014-15-ல் £427 மில்லியன் வழங்கிய நிலையில், தற்போது வெறும் 21 மில்லியன் மட்டுமே வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகரித்து வரும் பாதுகாப்பு செலவீனங்களை கருத்தில் கொண்டு குறைந்த அளவிலான நிதி ஒதுக்கப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், உலகளாவிய சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான பெக்கி கூப்பர் (Beccy Cooper), 2014/15 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருந்தொற்றின் படிப்பினைகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், முன்கூட்டியே துணிச்சலாகச் செயல்படுவது உயிர்களைக் காப்பாற்றுகிறது.
எபோலா எல்லைகளை மதிப்பதில்லை. சர்வதேச அளவில் நோய் பரவலுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும்போது, தொடர்புகளைக் கண்டறிதல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல் மற்றும் முன்கள சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாத்தல் ஆகிய திறன்களை நாம் இழக்கிறோம்.
நாம் விட்டுச்செல்லும் ஒவ்வொரு இடைவெளியையும் இந்த வைரஸ் பயன்படுத்திக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.




