பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் வெப்ப அலை : கனமழை பெய்ய வாய்ப்பு!
பிரித்தானியாவில் நிலவிய கடுமையான வெப்ப அலை முடிவுக்கு வரவுள்ளதாக மெட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அறிவிப்பின்படி அடுத்து வரும் இரண்டு நாட்கள் கடுமையான மழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் வரைபடங்கள், கனமழை பரவலாகக் காணப்படுவதைக் காட்டுகின்றன; சில பகுதிகளில் மணிக்கு 8 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று இரவு 11.00 மணியில் இருந்து மேற்கிலிருந்து மழை பெய்ய தொடங்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் 35.1°C ஆக இருந்த அதிகபட்ச வெப்பநிலைக்குப் பிறகு, வெப்பநிலை கணிசமாகக் குறைந்து வருகின்றது. இருப்பினும் இந்த வெப்ப அலையால் நீர் தொடர்பான விபத்துகள் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




