செய்தி

அரசின் ஆயுள் முடியப்போகிறது: கொக்கரிக்கிறார் விமல்!

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆயுள் காலம் குறைவடைய ஆரம்பித்துள்ளது என்பதையே தற்போது நடக்கும் சம்பவங்கள் புலப்படுத்துகின்றன.” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே விமல்வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.

“மே மாதம் கைதட்டுவதற்கு தயாராக இருக்குமாறு மே தினக் கூட்டத்தில் உரையாற்றும்போது ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

எதிரணி உறுப்பினர்களுக்கு எதிராக உள்ள வழக்குகள் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். என்னை விளக்கமறியலில் வைப்பதற்கே பொலிஸார் முற்பட்டனர். ஆனால் நீதிமன்றம் நீதியை வழங்கியது.

தமது ஆயுள் காலம் குறைவடைந்த ஆரம்பித்துள்ளதாலேயே அரசாங்கம் கீழ்த்தரமான செயலில் இறங்கியுள்ளது.” என்றார் விமல் வீரவன்ச.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!