செய்தி விளையாட்டு

இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணி எது? இன்று பலப்பரீட்சை!

IPL 2026 கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டது. இன்று Play – off சுற்று ஆரம்பமாகின்றது.

புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பெற்ற அணிகளான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் , குஜராத் டைட்டன்சும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் இன்று மோதுகின்றன.

இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.
அதாவது வெளியேற்றுதல் (Eliminator) சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் மோதும் வாய்ப்பு கிடைக்கும்.

இவ்விரு அணிகளும் நடப்பு தொடரில் ஏற்கனவே 2 முறை மோதி இருக்கின்றன. இதில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதே போல் ஆமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி குஜராத் பதிலடி கொடுத்தது. ஏறக்குறைய சரிசம பலத்துடன் இரு அணிகளும் மல்லுகட்டுவதால் இன்றைய களத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!