உலக சந்தையில் எண்ணெய் விலைகள் கடும் சரிவு
ஈரான் மற்றும் அமெரிக்க இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தையில் எண்ணெய் விலைகள் கடுமையாகக் குறைந்துள்ளன.
திங்கட்கிழமைக்குள் போர் நிறத்த ஒப்பந்தம் எட்டப்படலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் Marco Rubio தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, உலகளாவிய எண்ணெய் அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 5.5% வீழ்ச்சியடைந்து
பீப்பாயொன்றுக்கு சுமார் $97.90 டொலராக குறைந்துள்ளது. பிற்பகலில் சுமார் $97.70 அளவில் பதிவானது
அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்பும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரான் தரப்பு முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்தாலும், உடனடி ஒப்பந்தம் ஏற்படாது என்றும் கூறியுள்ளது.




